நம் நாட்டில், 'ஒமைக்ரான்' வகை கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டதாக, மத்திய சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், 'இன்சாகாக்' எனப்படும் மரபணு வரிசை முறை கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. மெட்ரோ எனப்படும் பெரு நகரங்களில் பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால், கொரோனாவால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நம் நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டதாக, மத்திய சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இன்சாகாக் அமைப்பு தெரிவித்துள்ளது.
சமூகப் பரவல் (Social Spreading)
இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது. அனைத்து மெட்ரோ நகரங்களிலும் அது வேகமாக பரவி வருகிது. இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டில்லி மற்றும் மும்பையில் அதிகமானோர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இனி, வெளிநாடுகளில் இருந்து வரும் மக்களால் அல்லாமல், உள்நாட்டு மக்களிடையே ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவும், எனினும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலானோருக்கு எந்த அறிகுறிகளும் தென்படவில்லை; பலருக்கு சிறிய அறிகுறிகள் மட்டுமே உள்ளன.
இதற்கிடையே நம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் குறைந்துள்ளதாக, சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதன்படி கடந்த 7 - 13 வரையிலான நாட்களில், 2.2 விகிதமாக பதிவான பாதிப்பு அளவு தற்போது 1.57 விகிதமாக குறைந்து உள்ளது. அதேநேரத்தில் அடுத்த 14 நாட்களில், தேசிய அளவிலான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை உச்சத்தை தொடும் என்றும் ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
மருத்துவமனையில் 50 பேருக்கு தொற்று
குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலி யர்கள் உட்பட, 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அவர்கள் அனைவரும் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.
கொரோனா பரவலின் போது நோயாளிகளின் உயிர்களை காப்பாற்ற, டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள் போராடினர்; பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த கொரோனா பரவல், மருத்துவ ஊழியர்களுக்கு உடல் சோர்வு மற்றும் மன சோர்வையும் ஏற்படுத்தி உள்ளது என்று இன்சாகாக் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
Share your comments