கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் கொரோனா ஆட்டம் காட்டி வந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த ஒருவர் மூலம் தற்போது ஒமிக்ரான் வைரசும் கால்பதித்து விட்டது. இருப்பினும் மக்கள் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் (Corona virus)
உலக நாடுகளை உலுக்கி எடுத்தக் கொரோனா வைரஸ், தமிழகத்திலும், தாராளமாக ஆட்டம் போட்டது. இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி, கடந்த 2 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானோர் பலியான நிலையில், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, தொடர் தடுப்பூசி முகாம் என அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் பலனாக, தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 600 ஆகக் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கரோனா தொற்று தற்போது குறைந்துவரும் நிலையில், அண்டை மாநிலங்களில் பரவிவரும் ஒமிக்ரான் தொற்று பெரிய அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
பாதிப்பு அதிகரிப்பு (Increased vulnerability)
தென்னாப்பிரிக்க நாடுகளில் உருவானதாகக் கூறப்படும் இந்தப் புதிய வகை கரோனா வைரஸ், 77க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் வேகமாகப் பரவிவருகிறது. கடந்த சில நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை இந்தியா முழுவதும் 60க்கும் மேலாக உயர்ந்துள்ளது.
ஒமிக்ரான் உறுதியானது (Omicron is stable)
வட இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கண்டறியப்பட்ட இந்தத் தொற்று, இரண்டு, மூன்று நாட்களாக தென்னிந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பரவிவருகிறது. குறிப்பாக, ராஜஸ்தானில் 10க்கும் அதிகமான நபர்களுக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நைஜீரியாவில் இருந்து தமிழ்நாடு வந்த 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் ஒமிக்ரான் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களின் மாதிரிகள் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அச்சப்பட வேண்டாம் (Do not be afraid)
தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இரண்டு தவணை தடுப்பூசி, சமூக இடைவெளி, அடிக்கடிக் கை கழுவுதல், மாஸ்க் கட்டாயம் அணிதல் உள்ளிட்ட பொது சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க...
கொரோனாவிற்கு பிளாஸ்மா சிகிச்சை தேவையில்லை: உலக சுகாதார அமைப்பு தகவல்!
Share your comments