ஒமிக்ரான் பரவல் உலகம் முழுக்க வேகமாக அதிகரித்து வருகிறது. பல நாடுகளில் கேஸ்கள் உயர்ந்து வரும் நிலையில் தான் ஒமிக்ரான் பரவல் குறித்து அமெரிக்காவின் டாப் அறிவியலாளரும், வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகருமான ஆண்டனி பவுச்சி நல்ல செய்தி ஒன்றை கூறி இருக்கிறார். ஒமிக்ரான் காரணமாக கொரோனா அலை வேகமாக அதிகரித்து வருகிறது.
ஆண்டனி பவுச்சி (Antony pouchi)
ஒரு விஷயத்தை பார்த்தீர்கள் என்றால் கொஞ்சம் நம்பிக்கை பிறக்கும். தென்னாப்பிரிக்காவில் இதேபோல்தான் ஒமிக்ரான் (Omicron) மிக வேகமாக பரவியது. அங்கு நவம்பரில் கிராப் மிக வேகமாக மேலே சென்றது. ஆனால் இப்போது அங்கு கேஸ்கள் சட்டென குறைந்துவிட்டன.
இதுதான் நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை. இதனால் ஒமிக்ரான் காரணமாக கேஸ்கள் வேகமாக பரவி, மிக வேகமாக உச்சம் தொட்டு, உடனே பரவல் முடியும் என்று நினைக்கிறேன்.
ஓமிக்ரான் கேஸ்கள் (Omicron Cases)
இந்த அலை நீண்ட நேரம் நீடிக்காது. வேகமாக இது உச்சம் தொடும் வாய்ப்புகள் உள்ளது. அமெரிக்காவில் கேஸ்கள் அதிகரித்தாலும் மருத்துவமனையில் சேரும் நபர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஒமிக்ரான் வலிமை குறைந்தது என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.
இது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. மற்ற நாடுகளிலும் இது நடக்கலாம். இதனால் லாக்டவுன் போடும்போது பொருளாதாரம் பாதிக்காத வகையில் கட்டுப்பாடுகளை விதிக்கலாம். பரவலை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அதுதான் முக்கியம். மொத்தமாக கட்டுப்பாடுகளை விதித்து அனைத்தையும் மூடுவது சரியாக இருக்காது என்று கூறினார்.
மேலும் படிக்க
இரவு ஊரடங்கை விட முகக்கவசம், தடுப்பூசியே நம்மைப் பாதுகாக்கும்!
Share your comments