கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து தமிழகத்தில் வரும் 1ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக, அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
அரசு நடவடிக்கை (Government action)
நாள் தோறும் 35 ஆயிரத்தைத் தாண்டிருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளால், 5 ஆயிரமாகக் குறைந்துள்ளது.
கட்டுப்பாடுகள் (Restrictions)
குறிப்பாக கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மட்டுமே பாதிப்பு சற்று அதிகமாக இருக்கிறது. எனவே அவற்றில், கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
படிப்படியாகத் தளர்வுகள் (Gradual relaxations)
அதேநேரத்தில் கொடூரக் கொரோனா வைரஸின் 2-வது அலையின் தீவுரம் குறைந்த மாவட்டங்களில், படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
பேருந்துகள் இயக்கம் (Movement of buses)
இதன் ஒருபகுதியாக 27 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருத்தல், 50 சதவீத இருக்கையை மட்டுமே நிரப்புதல், கிருமி நாசினித் தெளிப்பு எனப் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
தாமதம் (Delay)
இருப்பினும் தனியார் மற்றும் ஆம்னி பேருந்து போக்குவரத்துத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆம்னி பேருந்து சேவை ஜூலை 1&ந் தேதி முதல் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
4 ஆயிரம் பேருந்துகள் (4 thousand buses)
தமிழகத்தில் 4 ஆயிரம் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஊரடங்கு விதிக்கப்பட்டதால், ஆம்னி பஸ் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இதே போல தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை.
ஜூலை 1ம் தேதி முதல் (Starting July 1st)
தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் இன்று ஒருசில தனியார் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. பெரும்பாலான பேருந்துகளை 1-ந் தேதி முதல் இயக்க திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க தலைவர் அன்பழகன் கூறியதாவது:-
வாழ்வாதாரம் (Livelihood)
பொதுமுடக்கம் காரணமாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை நம்பியுள்ள தொழிலாளர் குடும்பம் வருவாய் இழந்துள்ளனர்.
வரிவிலக்கு (Tax exemption)
எங்களது பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு ஏப்ரல், மே, ஜூன் காலாண்டு வரி விலக்கு பெரும் வகையில் பேருந்துகளை இயக்கப்போவதில்லை என்று ஏற்கனவே போக்குவரத்து துறைக்கு தெரிவித்துள்ளோம். ஆனால் ஜூன் மாதம் முழுவதும் பேருந்துகளை இயக்காமல் இருந்தால்தான் வரிவிலக்கை பெற முடியும்.
எனவே ஆம்னி பேருந்துளை தற்போது இயக்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே ஒருசில பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படும். அனைத்து பேருந்துகளும் ஜூலை 1-ந் தேதி முதல் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினர்.
மேலும் படிக்க...
சிபிஎஸ்இ வகுப்பு 12 வாரிய தேர்வு 2021 முடிவுகள்,தேர்வு மதிப்பெண்கள் கணக்கீடு
வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் பேரணி நடத்தினர்!
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை விரிவுபடுத்த பிரதமர் வலியுறுத்தல்
Share your comments