கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நூற்புழுவியல் துறை சார்பில் பழங்குடியின விவசாயிகளுக்கு ஒருநாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஒருநாள் பயிற்சி (One Day Training)
அகில இந்திய ஒருங்கிணைந்த நூற்பழுத் திட்டம் மற்றும் பழங்குடியினத் துணைத் திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி தம்மபதி கிராம பழங்குடியின் விவசாயிகளுக்கு ஒருநாள் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தாவர நூற்புழுக்களும், அதன் மேலாண்மையும் குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) நூற்புழுவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் கலையரசன், கண்ணுக்குப் புலப்படாத இத்தகைய நூற்புழுக்கள் எவ்வாறு பயிர்களைப் பாதித்து, மகசூல் இழப்பை படுத்துகின்றன என்பது குறித்து எடுத்துரைத்தார்.
இதேபோல் உதவி பேராசிரியர் முனைவர் நா. சுவர்ண குமாரி, எவ்வாறு இயற்கை முறையில் உயிர் நூற்புழுக்கொல்லி பூஞ்சாணத்தைக் கொண்டு, கட்டுப்படுத்தலாம் என்பதை விளக்கினார்.
இந்த ஒருநாள் பயிற்சியில் 100க்கும் மேற்பட்ட பழங்குடியின விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். அவர்களுக்கு வேளாண் இடுபொருட்கள் , பண்ணைக் கருவிகள் மற்றும் பயிற்சி தொகுப்புகள் வழங்கப்பட்டன.
மேலும் படிக்க...
ஒருங்கிணைந்த களை மேலாண்மை குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி- TNAU ஏற்பாடு!
வாழையின் விலை வழக்கத்தைப் போல நிலையாக இருக்கும்- TNAUவின் கணிப்பு!
மிளகாய் வற்றலுக்கு ரூ.9000/- வரை கிடைக்கும்- TNAUவின் விலை முன்னறிவிப்பு!
Share your comments