5 சவரன் வரை நகைக்கடன் வாங்கியவர்களுக்கு கடன் தள்ளுபடி வழங்கும் திட்டத்தில், ஒரு லட்சம் பேருக்கு கடன் தள்ளுபடி கிடையாது என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில், இந்தத்திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தில் தற்போது வரை 5 லட்சத்து 22 ஆயிரத்து 514 விவசாயிகளுக்கு, 3 ஆயிரத்து 969 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. 5 சவரன் வரை நகைக்கடன் பெற்று தற்போது வரை ஒரு லட்சம் பேர் நகை கடனுக்கான உறுதிமொழி பத்திரம் கொடுக்கவில்லை.
பத்திரம் இல்லை
இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது:
கூட்டுறவு வங்கிகளில் 14 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 5 சவரன் வரை நகைக்கடன் பெற்று தற்போது வரை ஒரு லட்சம் பேர் நகை கடனுக்கான உறுதிமொழி பத்திரம் கொடுக்கவில்லை. எனவே அவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்ய முடியாத நிலை உள்ளது. உறுதிமொழி பத்திரம் கொடுத்தால் அவர்களுக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும்.
பயிர்க்கடன்
தமிழகத்தில் தற்போது வரை 5 லட்சத்து 22 ஆயிரத்து 514 விவசாயிகளுக்கு, 3 ஆயிரத்து 969 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.
கூகுள் பே
சென்னை அண்ணாநகர், திருமங்கலம், தியாகராயநகர் உள்ளிட்ட 10 ரேஷன் கடைகள், கூட்டுறவு மருந்தகங்களில் மூலம் பணம் செலுத்தி பொருட்களை பெரும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் கூறினார். நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்ற இந்த அறிவிப்பு, பாதிக்கப்பட்டுள்ள 1 லட்சம் பேரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
மேலும் படிக்க...
Share your comments