பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
கொடூரக் கொரோனா (Cruel corona)
உலக நாடுகளை உலுக்கி எடுத்துவரும் கொரோனா இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. பல மாநிலங்களைக் கடந்த 2 ஆண்டுகளாகக் கொரோன வைரஸ் தொற்றுப் பதம்பார்த்து வருகிறது.
3-வது அலை (3rd wave)
இதைத்தொடர்ந்து ஒமிக்ரான் உட்படப் பல பெயர்களில் உருமாறிய வைரஸ் ஒரு புறம் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், கொரோனா வைரஸின் 3 வது அலை மாநிலத்தின் பல பகுதிகளில் ஆட்டம் காட்டி வருகிறது.
தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு உட்பட, ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப் பட்டுள்ளன.மேலும், 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆன்லைனில் மட்டும் வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேரடி வகுப்புகள்
அதேநேரத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால், அதனைக் கருத்தில்கொண்டு, நேரடி வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பெற்றோர் கோரிக்கை (Parents demand )
இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், 10ம் வகுப்பு முதலான வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகளை ரத்து செய்து விட்டு, ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும் என, பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
உயர்நீதிமன்றம் கருத்து (High Court opinion
இதனிடையே ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என, உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
விரைவில் அறிவிப்பு (Notice coming soon)
இவ்வாறாக எல்லாத் தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளதால், ஆன்லைன் வகுப்புகளை மட்டும் நடத்தலாமா என்பது குறித்து, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதுகுறித்து, விரைவில் அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று முதல் பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
பெண்களுக்கு மாதம் ரூ.1,000 - முதலமைச்சரின் முக்கிய அறிவிப்பு!
Share your comments