கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் வரும் 29ம் தேதி இணையவழி அங்கக வேளாண்மை குறித்த சிறப்பு பயிற்சி நடைபெறவுள்ளது.
பல்கலைக்கழகத்தின் வளங்குன்றா அங்கக வேளாண்மை துறை ஏற்பாடு செய்துள்ள இந்த பயிற்சி, கீழக்கண்டத் தலைப்புகளில் நடத்தப்பட உள்ளது.
-
இயற்கை முறையில் பயிர் சத்துக்கள் மேலாண்மை
-
இயற்கை முறையில் களை மேலாண்மை
-
இயற்கை உரம் மற்றும் பூச்சி விரட்டி தயாரித்தல்
-
இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய்க் கட்டுப்பாடு
-
அங்கக சான்றிதழ் பெறும் வழிமுறைகள் மற்றும் பங்கேற்பாளர்களின் உறுதியளிப்புத்திட்டம்
ஆர்வமுள்ளவர்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்ள பயிற்சி கட்டணமான 590 ரூபாயை வங்கிக்கணக்கில் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வங்கி விவரம் (Bank Details)
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, (State Bank Of India) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கிளை A/C No. 37015410509 IFSC Code - SBIN 002274
கட்டணம் மற்றும் பதிவு குறித்த விவரங்களை 94437 78628 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் அல்லது organic tnau.ac.in-க்கு மின்னஞ்சல் செய்யலாம்.பயிற்சியின் முடிவில் சான்றிதழ் மற்றும் தொழில்நுட்ப கையேடு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்
வளங்குன்றா அங்கக வேளாண்மைத்துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோவை - 641 003
என்ற முகவரியிலும், 0422- 6611206/2455055/9443778628 என்ற எண்களிலும், organic@tnau.ac.in என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
விவசாயத்திற்கு மின் இணைப்பு பெறுவது இனி ரொம்ப ஈஸி- விபரம் உள்ளே!
இந்தியக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி- தமிழகத்தில் 2 நாட்களுக்கு கொட்டப்போகுது கனமழை!!
Share your comments