பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும், கோவிட் பாதிப்புக்கு உள்ளானவர்களால் பிறருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பொது சுகாதாரத்துறை சட்டத்தில் தமிழக அரசு சட்டத்திருத்தம் செய்துள்ளது.
அனுமதி
பொது இடங்களான மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி (Vaccine) செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். மார்க்கெட், தியேட்டர்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரிகளில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். இது குறித்து பள்ளி, கல்லூரி, தியேட்டர்கள், மார்க்கெட், விளையாட்டு கூடங்கள், இதர பொழுதுபோக்கு இடங்கள் உள்ளிட்டவற்றின் உரிமையாளர்களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொது இடங்களுக்கு வருபவர்கள் கோவிட் தடுப்பூசி செலுத்தி உள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் முழுமையாக முடிந்துள்ள நிலையில், அதன் தாக்கம் மட்டும் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதால் தமிழக அரசு இத்தகைய முடிவை எடுத்துள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பால், இனி தடுப்பூசி போடாதவர்கள் கூட விரைவாக தடுப்பூசி போட முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களுக்கு வசதியாக வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
கொரோனாவே இன்னும் போகலை: அதுக்குள்ள புதுசா கேரளாவில் நோரோ வைரஸ் பாதிப்பு!
Share your comments