விவசாயிகளின் விளைச்சலை கொள்முதல் செய்ய ஈரோடு அடுத்த நசியனூரில் நேற்று, நேரடி நெல் கொள்முதல் மையம் (Paddy Procurement Center) திறக்கப்பட்டது. மேற்கு எம்.எல்.ஏ., ராமலிங்கம் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் கதிரவன் (Kadhiravan) கொள்முதலை துவக்கி வைத்தார். இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல் கொள்முதல் நிலையம்
ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி பாசன பகுதியில் நெல் அறுவடை (Paddy Harvest) நடக்கிறது. அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் நசியனூர், பவானி, அம்மாபேட்டை, நாகரணை, உக்கரம், கவுந்தப்பாடி, பெரியபுலியூர், பள்ளபாளையம் என எட்டு இடங்களில், நேற்று துவங்கப்பட்டது. 'ஏ' கிரேடு (A Grade) குவிண்டால், 1,958 ரூபாய், சாதாரண ரக நெல், 1,918 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும். நாளை முதல் கொடுமுடி, அஞ்சூர், வெள்ளோடு, வாய்க்கால்புதூர், கே.ஜி.வலசு, மொடக்குறிச்சி, அரச்சலூர், தட்டாம்பாளையம், அவல்பூந்துறை, எழுமாத்தூர், சிவகிரி, கஸ்பாபேட்டையில், கொள்முதல் மையம் திறக்கப்படும். செயல்பாட்டில் உள்ள மையங்கள், அறுவடை (Harvest) முடியும் வரை செயல்படும். இவ்வாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூறினார்.
விவசாயிகள் மகிழ்ச்சி
ஈரோடு மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களால், விவசாயிகளின் நெல் விளைச்சலை மிக எளிதாக விற்க முடியும். புதிய கொள்முதல் நிலையங்களால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபோல், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோல் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டால் அனைத்து விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக அமையும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
இயற்கை விவசாயத்தை கடைபிடிக்க வேண்டுகோள் விடுக்கும் இயற்கை விவசாயி!
வெங்காய பயிர்களில் அடிச்சாம்பல் அழுகல் நோய்! கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து அதிகாரி விளக்கம்!
Share your comments