விவசாயப் பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி மேட்டூர் கால்வாயில் நீர் திறப்பது வழக்கம். ஆனால், 13 ஆண்டுகளாக கால்வாயில் நீர் திறக்கப்படாமல் இருந்த நிலையில், நேற்று நீர் திறந்திருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9.5 டி.எம்.சி
மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் டிசம்பர் 15 வரை 137 நாட்கள் பாசனத்திற்கு கிழக்கு மேற்கு கால்வாயில் 9.5 டி.எம்.சி (TMC) நீர் திறக்கப்படும். இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் கடந்த 2007ல் குறித்தபடி ஆகஸ்ட் ஒன்றில் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அணை நீர்மட்டம் குறைவாக இருந்ததால் குறித்தபடி ஆகஸ்ட் ஒன்றில் நீர் திறக்கவில்லை.
நீர் திறப்பு
இந்நிலையில் 13 ஆண்டுகளுக்கு பின்பு மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் நேற்று காலை 11:00 மணிக்கு பாசனத்திற்கு (Irrigation) நீர் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம், மேட்டூர் எம் எல் ஏ.சதாசிவம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். முதல்கட்டமாக விநாடிக்கு 500 கனஅடி, நீர் பாசனத்திற்கு திறக்கப்படடது.
மேலும் படிக்க
கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்!
குறுமிளகு கொடிகளில் நோய்த் தாக்குதலைத் தடுக்க மருந்து தெளிக்கும் விவசாயிகள்!
Share your comments