பொள்ளாச்சி பகுதிகளில் கோடை மழைக்கு வாய்ப்பு இருப்பதால் விவசாயிகள் கோடை உழவு பணிகளை மேற்கொள்ளலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் நாக பசுபதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :
மழைக்கு வாய்ப்பு
பொள்ளாச்சி பகுதியில் சில நாட்களுக்கு முன்பு கோடை மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே தற்போது விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் உழவு பணிகளை மேற்கொள்ள சரியான நேரம் ஆகும்.
மானாவாரி நில சாகுபடி இயற்கை உணவு மேற்கொள்ளுதல் ஒரு முக்கியமான தொழில் நுட்பமாகும். பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய பகுதியில் சோளம், பயறு வகைகள், நிலக்கடலை போன்ற பயிர்கள் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.
உழவு செய்வதால் கிடைக்கும் நன்மை
-
கோடைபருவத்தில் மானாவாரி நிலப்பகுதியில் சரிவுக்கு குறுக்கே உழவு செய்ய வேண்டும்.
-
இந்த கோடை உழவுப் பணிகளை மேற்கொள்ளுவதால் பல்வேறு நன்மைகள் உள்ளன.
-
நிலத்தில் மழைநீர் இறங்கும் திறன் அதிகரிக்கும். மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைக்கும்.
-
நன்மை தரும் உயிரினங்களின் நெருக்கம் அதிகரிக்கும்.
-
மேலடுக்கு மண் இறுக்கத்தை தளர்த்தி மழைநீர் உள்ளே புகும் திறனை மேம்படுத்துகிறது.
-
எனவே சேகரிக்கப்பட்ட மழைநீர் பயிர்களுக்கு வறட்சியை தாங்கி வளர உதவுகிறது.
-
நிலத்தின் அடியில் உள்ள கூட்டுப்புழுக்கள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் வெளியில் கொண்டு வரப்பட்டு அழிக்கப் படுகின்றன.
-
அத்துடன் அந்த புழுக்கள் பறவைகளுக்கும் உணவாகுகிறது. இதனால் பூச்சிகளின் தாக்குதல் குறைகிறது.
-
களை செடிகளின் வேர்கள் அறுக்கப்பட்டு காய்ந்து விடுகின்றன.
-
மண் இலகுவாகி அடுத்த பருவத்தில் சாகுபடி செய்யும் பயிருக்கு உரம் சமச்சீராக கிடைக்கும். அத்துடன் மகசூலும் அதிகரிக்கும்.
எனவே விவசாயிகள் தங்கள் நிலங்களில் உழவு பணிகளை மேற்கொண்டு பயன் அடையலாம்.
Share your comments