கிழிந்த ரூபாய் நோட்டுக்களை எந்த வங்கிகளிலும் மாற்றலாம் என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பணம்
வாழும்போதும், மறைந்தபோதும் நிச்சயம் கையில் இருக்க வேண்டியது பணம். அதனால் அந்தப் பணத்தைத் தேடும் பணியிலேயே நம் பெரும்பாலான வாழ்க்கை கரைந்துவிடுகிறது.
கிழிந்த நோட்டுகள்
அப்படி அரும்பாடுபட்டுச் சம்பாதித்த பணம் கிழிந்துவிட்டால், தற்போது எந்த வங்கியிலும் மாற்றிக்கொடுப்பது கிடையாது. அதுமட்டுமல்லாமல், ரிசர்வ் வங்கிக்குத்தான் செல்லவேண்டும் என பதிலடி கொடுத்துத் திருப்பி அனுப்பிவிடுகிறார்கள். இந்த பிரச்னைக்கு தற்போது தீர்வு கிடைக்கப்போகிறது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிழிந்த மற்றும் மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற அந்தந்த மாநிலங்களின் தலைநகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு செல்லவேண்டிய நிலை இருந்தது.
இதனால் மாநிலங்களில் தலைநகரங்களில் உள்ள மக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற வசதி இருந்தது. ஆனால், கிராம புற மக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாத நிலையில் இருந்தனர். இதனால் நாடு முழுவதும் மாதந்தோறும் பல கோடி ரூபாய் வீணாகி வருகிறது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனாவால் பாதிப்பு
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பொதுமக்கள் கிழிந்த, மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை மாற்ற வசதியாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், அவற்றின் கிளை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் வங்கிகள், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலை பின்பற்ற முடியாமல் போனது.
இதனால் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் இனிமேல் பொதுமக்கள் கிழிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கிகளிலும் மாற்றி கொள்ளலாம். இதுதொடர்பாக அனைத்து வங்கிகளுக்கு அறிக்கை அனுப்பி உத்தரவிடப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி
மேலும் பொதுமக்களுக்கு கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுக்க உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும், போதுமான அளவு சில்லறை நாணயங்களை வழங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி போடவில்லையா? - இனி ரேஷன் பொருட்கள், கியாஸ், பெட்ரோல் கிடையாது!
புதியக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி- 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!
Share your comments