நீலகிரி மாவட்டத்தில் உதகை 200 விழா மற்றும் கோடை விழா 2023யினை முன்னிட்டு மாவட்டத்திற்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சிறப்பு தகவல் மையம் தமிழ்நாடு அரசு சுற்றுலா அலுவலகம், வென்லாக் சாலை, உதகமண்டலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகவல் மையம் காலை 8.00 மணி முதல் மாலை 8 மணி வரை 31.05.2023 வரை செயல்படும்.
இது குறித்து, செயதி மக்கள் தொடர்பு அலுவலகம், நீலகிரி மாவட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: நீலகிரி மாவட்டத்தில் உதகை 200 விழா மற்றும் கோடை விழா 2023யினை முன்னிட்டு மாவட்டத்திற்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சிறப்பு தகவல் மையம் தமிழ்நாடு அரசு சுற்றுலா அலுவலகம், வென்லாக் சாலை, உதகமண்டலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகவல் மையம் காலை 8.00 மணி முதல் மாலை 8 மணி வரை 31.05.2023 வரை செயல்படும். இம்மையத்தில் பின்வரும் தகவல்கள் மாவட்டத்திற்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளுக்கு தெரிவிக்கப்படும்.
1. நீலகிரி மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளின் காலி அறைகளின் தினசரி விபரம் (Rooms Vacancy Position) மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய நபரின் விபரம்.
2. புதிதாக அமைக்கப்பட்டுள்ள வாகனம் நிறுத்தும் இட விபரங்கள்
(Parking Lot)
3. வாகனங்கள் திருப்பி விடப்படும் வழித்தடங்களின் விபரங்கள்
(Vehicle Diversion Routes)
மேற்கண்ட தகவல்களை பெற 0423-2448977 என்ற தொலைபேசி எண்ணிற்கும், மற்றும் 8122643533 என்ற whatsapp எண்ணிற்கு தொடர்பு கொண்டு சுற்றுலா பயணிகள் பயனடையுமாறு என மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நீலகிரி அதன் குளிர் மற்றும் இதமான காலநிலை, அழகிய நிலப்பரப்புகள் மற்றும் ஏராளமான இயற்கை அழகு ஆகியவற்றால் கோடை சுற்றுலாவிற்கு சிறந்தது. இந்த மலைவாசஸ்தலமானது கோடை வெப்பத்தில் இருந்து விடுபடுவதுடன், சுற்றுலாப் பயணிகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் அனுபவத்தை வழங்குகிறது. பசுமையான தேயிலை தோட்டங்கள், அருவிகள், அடர்ந்த காடுகள் மற்றும் பனி மூடிய மலைகள் ஆகியவை அமைதியான மற்றும் அமைதியான சூழலை உருவாக்குகின்றன. எனவே, இந்த நேரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு ஏதுவாக, மேற்குறிப்பிட்ட நாட்களுக்கு Rooms Vacancy Position, Parking Lot மற்றும் Vehicle Diversion Routes போன்றவை அறிய, இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
TN Food Safety App மற்றும் Website: எளிதான புகார்கள், விரைவான தீர்வு!
Share your comments