அரியலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு தேசிய சமையல் எண்ணெய் - எண்ணெய் பனை இயக்கத்தின் கீழ் 25 ஹெக்டர் இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இலக்கினை 75 சதவீதம் சாதனை அடையும் வகையில் அரியலூர் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் தேசிய சமையல் எண்ணெய் பனை கன்று நடவு விழா வருகிற 25ம் தேதி முதல் அடுத்த மாதம் 5ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.
எண்ணெய் பனை பயிரானது நடவு செய்ததிலிருந்து மூன்று ஆண்டுகளில் மகசூல் தரவல்லது. எண்ணெய் பனை நடவு செய்வதற்கு களி கலந்த மணல் அல்லது செம்மண் கலந்த மணல் பகுதி மற்றும் நல்ல நீர் வசதிமிக்க பகுதி ஏற்றதாகும். ஒரு ஹெக்டருக்கு 20லிருந்து 25 டன் அளவு வரை எண்ணெய் பனை குலைகள் அறுவடை செய்யப்படுகிறது. அவ்வாறு அறுவடை செய்யப்படும் எண்ணெய் பனை குலைகள் அரசு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையாக டன் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரம் வரை அரசு அங்கீகாரம் பெற்ற கோத்ரெஜ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு விற்பனை செய்வதில் சிரமம் ஏற்படாது.
தற்போது நடைபெற உள்ள, இந்த விழாவில் பங்கேற்று மானியம் பெற விரும்பும் விவசாயிகள் கணினி சிட்டா, அசல் அடங்கல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு, வயல் வரைபடம் மற்றும் ஆதார் அட்டைநகல் ஆகிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்தும் உழவன் செயலி மூலம் பதிவு செய்தும், இந்த எண்ணெய் பனை நடவு விழாவில் கலந்துக்கொள்ளலாம்.
விவசாய பெருமக்கள், மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநர் (நடவுபொருள்) தொலைபேசியின் எண் 9715167612-ஐ தொடர்புக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ஜா.அனி மேரி ஸ்வர்ணை, அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
விரைவில் 1.25 லட்சம் PM Kisan Samriddhi Kendras: விவசாய பிரச்சனைக்கு தீர்வு காணும் மையம்
விவசாயிகளுக்கு இடுபொருள் செலவை மிச்சப்படுத்த, அரசு யூரியா கோல்ட் அறிமுகம்
Share your comments