1. செய்திகள்

தஞ்சாவூர் மூலிகை பண்ணைப் பகுதியில் இருளில் தவிக்கும் மக்கள்

T. Vigneshwaran
T. Vigneshwaran
Thanjavur Herbal Farm area

தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல வேலைகள் நடந்து வருகிறது. இதில் முக்கியமாக தஞ்சை நகரம் முழுவதும் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி செல்லும் சாலையில் உள்ள பிள்ளையார் பட்டியிலிருந்து - மூலிகைப் பண்ணை வரையிலும் சாலைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது.

சாலைகள் நன்றாக போடப்பட்டாலும் மின் விளக்கு அமைக்கப்படாமலேயே இருக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உட்பட அனைவரும் சுமார் 3 கி.மீ தூரம் டார்ச் லைட், மொபைல் லைட் பயண்படுத்தி செல்கின்றனர். இந்த 3 கி.மீ இடையில் பல தெருக்கள் அமைந்துள்ளது.

இந்த தெருக்களில் வசிக்கும் பொதுமக்கள் கடைகளுக்கோ பக்கத்தில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிக்கோ - செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தமிழ்ப் பல்கலைக்கழகம் கல்லூரியில் கல்வி பயின்று வரும் மாணவர்களின் விடுதியும் இடைப்பட்ட தொலைவில் தான் அமைந்துள்ளது.

இந்த மாணவர்கள் அத்யாவசிய தேவைகளை வாங்குவதற்கு கடைகளுக்கு இரவு நேரங்களில் இந்த சாலையை கடந்து தான் செல்ல வேண்டியிருந்தது. அணைத்து மக்களும் பூச்சி, பாம்புகளுக்கும், பயந்து பயந்து அச்சத்துடனே தினமும் செல்கின்றனர்.

இதுகுறித்து பேசிய வேலைக்கு சென்று இருளில் நடந்து வரும் அப்பகுதி பெண்கள், ‘நான் இந்த பகுதியில் 22 வருடங்களாக வசித்து வருகிறேன். இந்த 22 வருடங்களாகவும் இதே நிலைமைதான் உள்ளது. சாலைகள் நன்றாக போடப்பட்டுள்ளது. ஆனால் இந்த மின் விளக்கு வசதி ஏற்படுத்தப்படாமலே இருக்கிறது.

இந்த 22 ஆண்டுகளாக இருளில் நடந்து செல்பவர்களுக்கு விடியல் எப்போது வரும் என்று தெரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தயவு செய்து மின் விளக்கு ஏற்படுத்தி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்கள்.

மேலும் படிக்க:

நகை கடன் தள்ளுபடி - அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு

English Summary: People suffering in darkness in Thanjavur herbal farm area Published on: 26 September 2022, 07:37 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.