குஜராத் உருளைகிழங்கு விவாசகிகளுக்கு எதிரான வழக்கில் தீடிர் திருப்பம். வழக்கினை வாபஸ் பெற முன் வந்துள்ளது பெப்சி நிறுவனம். இந்த வழக்கனது வரும் ஜூன் 12 ஆம் தேதி ஒத்திவைக்க பட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கு ஓர் முடிவிக்கு வந்துள்ளது.
கடந்த மாதம் பெப்சி நிறுவனம் குஜராத் உள்ள நான்கு விவாசகிகள் மீது வழக்கு தொடுத்தது. பயிர் உரிமை பெற்ற அந்நிறுவனத்தின் FC5 ரக உருளை கிழங்குகளை பயிர் செய்து விற்றதற்காக தலா 1 கோடி விதம் நான்கு பேரிடம் நான்கு கோடி ரூபாய் கேட்டது. இவ்வழக்கு முதல் கட்ட விசாரணைக்கு வந்தது.அப்பொழுது பெப்சி நிறுவனம் சில நிபந்தனைகளை விதித்தது. அதாவது அவர்கள் பயிர் செய்த அனைத்து உருளை கிழங்குகளை நிறுவனத்திடமே கொடுத்து விடவேண்டும் என்று கேட்டது. இந்த வழக்கனது ஜூன் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க பட்டது.
விவசாகிகளுக்கு ஆதரவாக மாநில அரசும் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களும் களமிறங்கினர். இந்தியா முழுவதிலும் உள்ள விவசாகிகள் பெப்சி நிறுவனத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்த தொடங்கினர். சமூகவலை தளங்களில் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டன. பெப்சி நிறுவன பொருட்களுக்கு எதிர்ப்பும், புறக்கணிப்பும் தெரிவித்தனர்.
பெப்சி நிறுவனத்தின் தலைமையகம், நியூ யார்க் தலையிட்டு இதனை வெகு விரைவில் சரி செய்யும் படி கேட்டுக்கொண்டது. தலைமையகத்தின் தலையீட்டினாலும், இந்தியாவில் போதிய ஆதரவு இல்லாததாலும் இவ்வழக்கினை வாபஸ் பெற முடிவு செய்துள்ளது. விவாசகிகளுக்கு கிடைத்த வெற்றி எனலாம்.
Share your comments