வேலூர் மாவட்டத்தில் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள், உழவர் சந்தைகளில் (Farmers Markets) உள்ள கடைகள் மூலம் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
-
வேலூர் மாவட்டத்தில், டோல்கேட், காட்பாடி, காகிதப்பட்டறை மற்றும் குடியாத்தம் பகுதிகளில் நான்கு உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன.
-
இதில் மொத்தம் 2,728 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நான்கு
-
உழவர் சந்தைகளில் தினமும் சராசரியாக 350 விவசாயிகள் தாங்கள்
-
விளைவித்த காய்கறிகள் மற்றும் பழங்களை நேரடியாக விற்பனை செய்து பயன்பெறுகின்றனர்.
-
இதன்மூலம் வேலூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக
-
ரூ.28 இலட்சம் மதிப்பீட்டில் 80 மெ.டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
-
தற்போது அங்கக வேளாண்மையைக் காக்கும் பொருட்டு இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
-
அவர்கள் விளைவித்த விளைவித்த காய்கறிகள் மற்றும் பழங்களை உழவர் சந்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு, விற்பனை செய்வதற்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
-
ஆகவே விவசாயிகள் விதைச்சான்று மற்றும் அங்கக சான்று துறையில் பதிவு செய்து உரிய சான்றிதழ் பெற்று தாங்கள் விளைவித்த இயற்கை காய்கறிகள் மற்றும் பழங்களை உழவர் சந்தைகளில் விற்பனை செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
-
மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வேற மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) கைபேசி எண் 9442580451 மற்றும் நிர்வாக அதுவலர் (உழவர் சந்தை கைபேசி எண் 944396990) அவர்களை தொடர்பு கூறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்ற ஹெக்டேருக்கு ரூ. 10 ஆயிரம் மானியம்!
Share your comments