உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் பொதுமக்களை பாதித்துள்ளன என்பது மறுக்க இயலாது. தற்போது, நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சில ஆண்டுகளுக்கு முன் மாதத்திற்கு இருமுறை மட்டுமே நிர்ணயம் செய்யும் முறை வழக்கம் இருந்தது.
தற்போது, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி அடிப்படையில் நிர்ணையிக்கின்றன. அதன் விலைகளின் இன்றைய நிலவரம் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களுக்கு பின்பு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இப்போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. சில நாட்கள் முன்பிலிருந்து விலைகள் சதத்தை தாண்டி விட்டன.
இந்நிலையில் இன்றைய பெட்ரோல் விலை 13 நாளாக தொடர்ந்து மாற்றம் இல்லாமல் லிட்டருக்கு ரூ.102.49ஆக விற்கப்படுகிறது. அதே போன்று டீசல் விலையும் மாற்றப்படாமல் ரூ. 94.39 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் பெட்ரோல் டீசல் விலைகள் மாற்றப்படாமல் இருந்தது. அதன் பிறகு விலைகளில் தொடர்ந்து ஏற்றம் இறக்கம் காணப்படுகிறது என்பதோடு, பல இடங்களில் பெட்ரோல் விலை ரூ.100க்கு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:
நோயையும் மன அழுத்தத்தையும் நீக்கும் தாவரங்கள்...
விரைவில் இந்தியா விவசாயம் செய்ய முடியாத பூமியாக மாறும்- சத்குரு எச்சரிக்கை!
Share your comments