சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 100.13 ரூபாய், டீசல் லிட்டருக்கு 93.72 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசியத் தேவை (Essential)
மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக உள்ளது. ஏனெனில், பெட்ரோல் அல்லது, டீசல் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களும், நம்முடைய அத்தியாவசியத் தேவைகளுள் ஒன்றாக மாறிவிட்டது.
அதேநேரத்தில் அதிகரித்து வரும் வாகனங்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது.
விலை நிர்ணயம் (Pricing)
குறிப்பாக சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலை அன்றாடம் மாற்றி அமைக்கும் உரிமைய பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அளித்துள்ளது.
இதனால் இந்தியன் ஆயில் (Indian Oil), பாரத் பெட்ரோலியம் (bharat Petroleum), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (Hindustan Petroleum) ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி எரிபொருட்களின் விலையை நிர்ணயிக்கின்றன.
ஊரடங்கு (Curfew)
அதேநேரத்தில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஏதுவாக , ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் பல்வேறுத் தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை படிப்படியாக உயர்த்தி வருகின்றன.
ரூ.100ஐத் தாண்டியது (Exceeds Rs.100)
இதனால், 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பெட்ரோல் விலை அண்மையில் சதம் அடித்தது.
இதன் தொடர்ச்சியாக இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐத் தாண்டியுள்ளது.
இன்று 33 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 13 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 99.80 ரூபாய், டீசல் லிட்டர் 93.72 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வாகன ஓட்டிகள் அதிர்ச்சி (Motorists shocked)
கொரோனா நெருக்கடி காலத்திலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடனடி நடவடிக்கை (Immediate action)
எனவே மத்திய அரசு வாகன ஓட்டிகள் மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதாரச் சுமையைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
மேலும் படிக்க...
தக்காளி சாகுபடியில் பயிர் பாதுகாப்பு - தோட்டக்கலை துறை ஆலோசனை!!
Share your comments