பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில், ஆசியாவிலேயே இந்தியாவில்தான் பெட்ரோல் விலை அதிகமாக இருப்பது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
விலை அதிகரிப்பு (Price increase)
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை ஏற்றத்திற்கு ஏற்ப, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அண்மைகாலமாக, சர்வதேச சந்தையில் விலை குறைந்த போதிலும், இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
உயரும் விலை (Rising prices)
ஆரம்பத்தில் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை பின்னர் எண்ணெய் நிறுவனங்களின் மூலம் தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதாவது சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலைக் குறைந்த போதிலும், இந்தியாவில் குறைவதில்லை.
அரசு முடிவு (Government decision)
ஏற்கனவே ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டுவதாகச் சொல்லிக்கொண்டு, விலை அதிகரிப்பைத் தொடர்கின்றன. இதனால் விவசாயிகள், நடுத்தர வாசிகள், பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
உலகிலேயே அதிகபட்சமாக ஹாங்காங்கில் சுமார் 1 லிட்டர் பெட்ரோல் விலை சுமார் ரூ.200க்கு விற்கப்படும் நிலையில், இந்தியாவில் 110 ரூபாயை தாண்டி பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
அதேநேரத்தில் ஆசியாவிலேயே இந்தியாவில்தான் பெட்ரோல் விலை அதிகமாக இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
இந்தியா : ரூ. 109
ஜப்பான் : ரூ. 93
சீனா : ரூ. 84
வங்கதேசம் : ரூ. 77
இந்தோனேஷியா : ரூ. 60
இலங்கை : ரூ. 68
பாகிஸ்தான் : ரூ. 59
மலேசியா : ரூ. 37
விலை அதிகம் ஏன்? (Why is it so expensive?)
பிற நாடுகளில் பெட்ரோல் விலை என்பது கச்சா எண்ணெய் இறக்குமதி, நாட்டின் வரி விகிதங்கள், பொருளாதார வளர்ச்சி என பல காரணிகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் எப்போதும் பெட்ரோலிய பொருட்கள் குறைவாகவே இருந்து வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை எண்ணெய் இறக்குமதி செய்யும் முக்கிய நாடாக உள்ளது. இந்திய அரசின் அபரிதமான வரி விதிப்பும் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது. இருப்பினும் 21 நாடுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 50க்கும் கீழ் உள்ளது.
மேலும் படிக்க...
விவசாயிகளுக்கு வீடு தேடி வரும் டீசல்!!
வெளிநாட்டில் வெங்காயப் பண்ணையில் வேலை - மாதம் ரூ.1 லட்சம் ரூபாய் சம்பளம்!
Share your comments