மராட்டிய மாநிலம் நாக்பூரில் சுயசார்பு இந்தியாவுக்கான ‘ஆத்மநிர்பார் பாரத்’ சேவை அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் மத்திய நெடுஞ்சாலைகள் (National Highways) மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை மந்திரி நிதின் கட்கரி கலந்துகொண்டார்.
மூங்கிலில் இருந்து விமான எரிபொருள் உற்பத்தி:
மூங்கிலில் (Bamboo) இருந்து விமான எரிபொருளை உற்பத்தி (Production of aviation fuel) செய்வதற்கான திட்டம் குறித்த ஆலோசனையை மேற்கொண்டு வருகிறேன். இதற்கான மூங்கில்கள் கட்சிரோலி மாவட்டத்தில் இருந்து பெறப்படும். இவற்றை கொண்டு விமான எரிபொருள் உற்பத்தி செய்வதற்காக ஒரு சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கவும் திட்டமிட்டுள்ளேன். இதற்கான பணிகளை இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே தொடங்கிவிட்டேன். இந்த எரிபொருளில் விமானங்கள் இயங்குவதை விரைவில் அனைவருக்கும் காண்பிப்பேன்.
ஆத்மநிர்பார் பாரத்:
பிரதமர் மோடி ‘ஆத்மநிர்பார் பாரத்’ (Atmanirbar Bharat) எனப்படும் சுயசார்பு இந்தியா கொள்கையை உருவாக்கியுள்ளார். பிரதமர் கொண்டுவந்துள்ள இத்திட்டம் இந்தியாவை மகிழ்ச்சியான, முற்போக்கான, வளமான தேசமாக மாற்றுவதை நோக்கமாக கொண்டதாகும்.
சுய வேலைவாய்ப்பு:
நாக்பூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், அடுத்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தது 10,000 பேருக்கு சுய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சிறுதொழில் திட்டங்களை தொடங்க வேண்டும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
சென்னையில், நகரும் ரேஷன் கடை! காய்கறிகள் விற்கப்படுமா? மக்கள் எதிர்ப்பார்ப்பு
குறைந்தது பருத்தி சாகுபடி! மாற்றுப் பயிர்களில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்!
Share your comments