கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் விரால் மீன் பொறிப்பகம் (fish hatchery) அமைக்க திட்ட அறிக்கை சமர்ப்பித்தது தொடர்பாக கலெக்டர் சந்திரசேகர சகாமுரி (Chandrasekara Sakamuri) ஆய்வு செய்தார்
மீன் பொறிப்பகம்:
'பிரதம மந்திர் மட்சயா செம்பட யோஜனா' (Pradhan Mandir Matsaya Chempada Yojana) என்ற திட்டத்தில் கடலுார் மாவட்டத்தில் மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ள மீனவ விவசாயிகள் பயனடைவார்கள். இத்திட்டத்தில் விரால் மீன் பொறிப்பகம் அமைக்க ரூ.375.25 லட்சம் மதிப்பில் திட்ட அறிக்கையை (Project report) டாக்டர் செந்தில்குமார் சமர்ப்பித்துள்ளார். இவர், குறிஞ்சிப்பாடியில் மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்கிறார். இவர், விரால் மீன் வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகள் பயனடையும் வகையில் திட்ட அறிக்கை சமர்பித்தது குறித்து, மாவட்ட அளவிலான குழுவுடன் கலெக்டர் சந்திரசேகர சகாமுரி தலைமையில் ஏற்கனவே கூட்டம் நடந்தது. திட்ட அறிக்கை குறித்து கலெக்டர் குறிஞ்சிப்பாடியில் மீன் குஞ்சுகள் உற்பத்தி (Protection) நிலையத்தில் ஆய்வு செய்தார்.மீன்வளத் துறை துணை இயக்குனர் காத்தவராயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயக்குமார் உடனிருந்தனர்.
மீனவ விவசாயிகளுக்கு பயன்:
மீன் பொறிப்பகத் திட்டம் நிறைவடைந்த உடன், இத்திட்டத்தின் மூலம் மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் மீன் வளர்ப்பவர்களுக்கு பேருதவியாக அமையும். இதனால், மீன் உற்பத்தி அதிகரித்து, விற்பனை அதிகரிக்கும். மீனவ விவசாயிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட இத்திடடம், மீன் வளர்பபோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பயன்படும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
டெங்கு காய்ச்சலைத் தடுக்க 5 ஆயிரம் கம்பூசியா மீன்கள் உற்பத்தி!
Share your comments