பொதுவாக அனைவரும் காலையில் எழுந்தவுடன் டீ (Tea) குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் அதிகம் பேர். வேலை நேரங்களில் டீ குடிப்பதற்காக தனிநேரம் ஒதுக்குவார்கள். அந்த அளவிற்கு டீ நம் மக்களிடையே கலந்து விட்ட ஒன்று. பால் பாக்கெட்டுகளை சூடான பாத்திரங்களில் வைக்கும் போது, பிளாஷ்டிக் உருகி பாலுடன் கலந்து விடுகிறது. இதனை நாம் குடித்தால் புற்றுநோய் (Cancer) வரும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இனி, வெளி இடங்களில் டீ குடிக்கையில் அதிக கவனம் தேவை என்கிறது உணவு பாதுகாப்புத்துறை.
பிளாஸ்டிக் பால்: எச்சரிக்கை:
வெளி இடங்களில் உள்ள பாலகங்கள் மற்றும் டீக்கடைகளில் (Tea Stall), சூடான பாத்திரங்களின் மீது பால் பாக்கெட்டுகளை வைத்து சூடாக்கும் நிலை தொடர்கிறது. இக்கடைகளில் டீக்குடிப்பவர்களுக்கு, இதனால் உடல் நலன் கெடும் என்பதால், இவற்றை காணும் பொதுமக்கள் புகார் (Complaint) அளிக்க, உணவு பாதுகாப்புத்துறை (Department of Food Safety) அறிவுறுத்தியுள்ளது.
டீக்கடை, பேக்கரிகளில் கொதிக்கும் பால் பாத்திர மூடியின் மீது, பால் பாக்கெட்டுகளை (Milk Pocket) வைத்திருப்பதை, அனைவரும் பார்த்திருப்போம். இவ்வாறு, சூடான பாத்திரத்தின் மீது பால் பாக்கெட்டுகள் வைப்பதால், அவை நெகிழ்ந்து பல்வேறு ரசாயன மாற்றங்களை (Chemical Reactions) ஏற்படுத்தக்கூடியதாக மாறுகிறது. இப்பால் அல்லது டீயை குடித்தால், புற்றுநோய் (Cancer) ஏற்படவும் வாய்ப்புள்ளதாக, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
கடுமையான நடவடிக்கை
உணவு பாதுகாப்புத்துறைக்கு கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில், நேற்று அதிகாரிகள் அவிநாசி சாலையிலுள்ள, பத்துக்கும் மேற்பட்ட கடைகளில், ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுகளின் போது, சூடான பாத்திரத்தின் மீது பால் பாக்கெட் வைத்திருந்த கடைகளுக்கு, உடனடியாக எச்சரிக்கை (Warning) விடுத்து, நோட்டீஸ் வழங்கப்பட்டது.தொடர்ந்து, நாளிதழில் தின்பண்டங்களை மடித்துக்கொடுப்பது உள்ளிட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, அபராதம் (Penalty) விதிக்கப்பட்டது.
சூடான பாத்திரங்களின் மீது, பால் பாக்கெட் வைப்பதால், பிளாஸ்டிக் உருகி (Melt) பாலுடன் கலக்கும் வாய்ப்பு அதிகம். இதனால், பொதுமக்கள் உடல் ரீதியாக பாதிக்கப்படுவர். பாலகங்கள், டீக்கடை, பேக்கரிகளில் இதுபோன்று செய்வது தெரிந்தால், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இனி பேக்கரிகளில், இது போன்று பால் பாக்கெட்டுகளை சூடான பாத்திரங்களின் மீது வைத்திருப்பதை பொதுமக்கள் காண நேர்தால், உடனடியாக புகார் அளிக்கலாம். விதிமீறல் (Violation) கண்டறியப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்பு துறை அலுவலர் தமிழ்ச்செல்வன் கூறினார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வறண்டு போனாலும், தண்ணீர் நின்றாலும் நிரந்தர வருமானம் தரும் கோரை சாகுபடி!
விவசாயிகளின் புதிய திட்டம்! போட்டோ போராட்டம் விரைவில் ஆரம்பம்!
Share your comments