கொரோனா நோய் தொற்றால் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த முடியவில்லை. அவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று மத்திய-மாநில கல்வி வாரியம் அறிவித்தது. அதன்படி, தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை மாநில வாரிய பாடத்திட்டத்தின் கீழ் படித்த பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிட்டு அறிவித்தது.
இந்நிலையில் இன்று முதல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை மாநில வாரியம் அறிவித்துள்ளது.
இதன்படி www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மதிப்பெண் பட்டியலை இன்று காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அனைத்துத் தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளிகளுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் தேர்வுத் துறை ஏற்கனவே தெரிவித்துள்ளது.
முன்னதாக தற்போதைய மதிப்பெண் கணக்கீட்டில் திருப்தி இல்லாமல் தேர்வு எழுத வாய்ப்பு வழங்க வேண்டும் என்று விரும்பும் மாணவர்கள் மற்றும் பிளஸ்-1 தேர்வில் வரமுடியாமல் போனவர்களுக்கு தனியாக அழைப்பு விடுக்கப்படும். அதில் எத்தனை பேர் பதிவு செய்கிறார்கள் என்று பார்த்து வரவிருக்கும் அக்டோபர் அல்லது செப்டம்பர் மாதத்தில் அவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க:
IRCTC: ரயில்வேயின் அதிரடி திட்டம் !வீட்டில் இருந்து மாதம் 1 லட்சம்! இதோ விவரம்!
இனி டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை இல்லை!அதிரடி உத்தரவு !
10 ஆடுகள், 1000 கிலோ மீன்- ஆடிச் சீராகக் கொடுத்து அசத்திய மாமனார்!
Share your comments