விவசாயிகள் விளைவிக்கும், நெல் (Paddy) கோதுமை (wheat) உள்ளிட்ட விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) உறுதியளித்துள்ளார்.
உழவர் நலன்:
மத்திய பிரதேசத்தில், "உழவர் நலன்" (Ulhavar Nalan) என்ற தலைப்பில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில், காணொலி மூலம் பங்கேற்று, பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். விவசாய கிரடிட் கார்டுகளை (Agri Credit Card), முந்தைய ஆட்சிக்காலங்களைப் போன்று, பாகுபாடு பார்க்கமால், தமது தலைமையிலான மத்திய அரசு, அனைத்து விவசாயிகளுக்கு வழங்கியிருப்பதாக, பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். புதிய வேளாண் சட்டங்கள் (Agriculture Laws) குறித்து, தவறான தகவல்களை பரப்பி, விவசாயிகளை, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் தவறாக வழிநடத்துவதாக, பிரதமர் குற்றம்சாட்டினார்.
புதிய வேளாண் சட்டங்கள் ஏதோ ஒருநாள் நள்ளிரவில் இயற்றப்பட்டு, அறிமுகம் செய்யப்படவில்லை என பிரதமர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். கடந்த இருபது, முப்பது ஆண்டு காலமாக, மத்திய, மாநில அரசு வேளாண் சீர்திருத்தம் குறித்து, கலந்துரையாடல், ஆலோசனைகளை நிகழ்த்தியதன் அடிப்படையிலேயே, புதிய வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டிருப்பதாக, பிரதமர் உறுதிபடக் கூறினார்.
குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்:
விளைபொருள் கொள்முதலுக்கான, குறைந்தபட்ச ஆதார விலை (Minimum resource price) தொடரும் என்று திட்டவட்டமாக தெரிவித்த பிரதமர், புதிய வேளாண் சட்டங்களால், குறைந்தபட்ச ஆதார விலை நீக்கப்படவில்லை என உறுதியளித்தார்.
சுவாமிநாதன் கமிஷன்:
குறைந்தபட்ச ஆதார விலை நீக்கப்பட்டால், எப்படி ஆண்டுக்காண்டு விலை உயர்வு அறிவிக்கப்படுகிறது? என்றும் கேள்வி எழுப்பிய பிரதமர், சுவாமிநாதன் கமிஷன் (Swaminathan Commission) அறிக்கையின் முக்கிய அம்சமே, குறைந்தபட்ச ஆதார விலை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது தான் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
காளானின் உபரிநீரை, அசோலா மற்றும் கீரைகளுக்கு பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பம்!
விவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது - உச்சநீதிமன்றம் அறிவிப்பு!
Share your comments