PM KISAN 18வது தவணை வெளியிடப்பட்டது: பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 05, 2024) மகாராஷ்டிராவின் வாஷிமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது, 9.4 கோடி விவசாயிகளின் நேரடி வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் விதமாக (DBT) 20 ஆயிரம் கோடி நிதியை வெளியிட்டார்.
இந்தியாவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி உதவித் திட்டம் (PM kisan சம்மான் நிதி) கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் என மூன்று தவணைகளில் 4 மாதங்களுக்கு ஒருமுறை தலா 2 ஆயிரம் ரூபாய் என ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு நிதியுதவியாக வழங்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி
மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் நகரில் நடைபெற்ற நிகச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இதில், மத்திய விவசாய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் மூலம், பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 5ம் தேதியான இன்று, பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் 18வது தவணையை வெளியிட்டார். 20,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள இந்தத் தவணை, சுமார் 9.4 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் நேரடி வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது.
(DBT - Direct Benefit Transfer)
மகாராஷ்டிர விவசாயிகளுக்கு ரூ.1900 கோடி
மகாராஷ்டிராவில் மட்டும் சுமார் 91.51 லட்சம் விவசாயிகள் ரூ.1,900 கோடிக்கு மேல் பெறுகின்றனர். இது மாநிலத்தின் விவசாய செழுமைக்கு பங்களிக்கும் என பிரதமர் மோடி பேசினார்.
e-KYC கட்டாயம்
PM-KISAN தவணைகளைப் பெற, விவசாயிகள் தங்கள் e-KYC ஐ முடிக்க வேண்டும். PM-KISAN போர்ட்டலில் OTP-அடிப்படையிலான eKYC மூலம் அல்லது பயோமெட்ரிக் அடிப்படையிலான eKYC க்காக அருகிலுள்ள பொது சேவை மையங்களுக்கு (CSC) சென்று இதைச் செய்யலாம்.
PM-KISAN e-KYC எப்படி செய்வது என இங்கே காணலாம்.
PM-KISAN e-KYC செயல்முறையை இன்னும் முடிக்காதவர்கள் கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றி இன்றே e-KYC செயல்முறையை முடித்துவிடுங்கள்.
- PM Kisan-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை [https://pmkisan.gov.in/] பார்வையிடவும்.
- முகப்புப் பக்கத்தின் வலது புறத்தில் 'விவசாயிகளின் மூலை'யைக் கண்டறியவும்.
- ஃபார்மர்ஸ் கார்னருக்கு (Formers Corner) கீழே உள்ள பெட்டியில் உள்ள ‘e-KYC’ விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- ஆதார் இ-கேஒய்சி (Aadhar e-KYC) பக்கத்தை அணுகவும்.
- உங்கள் ஆதார் எண் மற்றும் காட்டப்படும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, தேடல் பட்டனை கிளிக் செய்யவும்.
- உங்கள் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு, "OTPயைப் பெறு" பட்டனை கிளிக் செய்யவும்.
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP-ஐ குறிப்பிட்ட நேரத்திற்குள் உள்ளிடவும்.
- உங்கள் PM KISAN e-KYC-ஐ வெற்றிகரமாக முடிக்க, ‘அங்கீகரிப்பிற்காக சமர்ப்பிக்கவும்’ என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
Read more:
சமவெளிப்பகுதியில் மிளகுடன் ஜாதிக்காய் சாகுபடி- அசத்திய புதுக்கோட்டை விவசாயி!
மாடித் தோட்டம் அமைக்கப் போறீங்களா? இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!
Share your comments