பிரதமர் விவசாய நிதியுதவி திட்டத்தில் மோசடிகளை தவிர்க்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 2019ம் ஆண்டில் 'பிரதம மந்திரி கிசான்' (PM Kisan) என்ற பெயரில் பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் ஏழை விவசாயிகளுக்கு 2,000 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2,000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக நிதி வழங்கப்படுகிறது.
நிபந்தனைகள் (Conditions)
10 தவணைகளுக்கு மேல் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறும் விவசாயி, தன் சொந்த நிலத்தில் விவசாயம் செய்ய வேண்டும். மத்திய - மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், இன்ஜினியர்கள், மாதம் 10 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுவோர் இத்திட்டதின் கீழ் பயன்பெற முடியாது.
புகார் (Compliant)
ஆனால், தகுதியற்ற 30 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து இந்த திட்டத்தில் முறைகேடுகளை தவிர்க்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபற்றி மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: நாட்டில் ஏழைகளின் நலனுக்காக செயல்படுத்தப்படும் பல திட்டங்களில் தகுதியற்றவர்கள் பயன்பெறுகின்றனர்.
விவசாயிகள் நிதியுதவி திட்டத்திலும் இது நடந்துள்ளது. இதை தவிர்க்க, மத்திய அரசு சில உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. வருமான வரி நிதியுதவி பெறும் விவசாயிகளை நேரிடையாக அடையாளம் காண வேண்டும்' என, மாநில அரசுகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வருமான வரித்துறையிடமிருந்து வருமான வரி செலுத்துவோரின் விபரங்களை பெற்று, அதில் விவசாய நிதியுதவி பெற்றோர் பெயர் உள்ளதா என ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
உவர்நிலத்தை வளமான விளைநிலமாக்கும் அதிசய செடி!
யானைகள் உயிரிழப்பைத் தடுக்கும் புதிய திட்டம்: விரைவில் அமலுக்கு வரும்!
Share your comments