நீங்களும் பிஎம் கிசான் திட்டத்தின் பயனாளியாக இருந்தால், இந்தச் செய்தி உங்களுக்கு முக்கியமானது. பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவின் 12வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் வெளியிட உள்ளார். மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டம் குறித்த அப்டேட் தற்போது வந்துள்ளது.
பிஎம் கிசான் (PM Kisan)
பிஎம் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் வரவிருக்கிறது. உண்மையில், இந்தத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டின் முதல் தவணை ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், இரண்டாவது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலும் வழங்கப்படுகிறது. எனவே நவம்பர் மாத இறுதிக்குள் பணம் வரலாம்.
எனவே பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 12ஆவது தவணை எப்போது கிடைக்கும் என்ற அறிவிப்பை இம்மாத இறுதிக்குள் மத்திய அரசு வெளியிட வாய்ப்பு உள்ளது. ஆனால், அதற்கான தேதி குறித்த அரசாணையோ, அறிவிப்போ இதுவரை வெளியிடப்படவில்லை. தீபாவளி பண்டிகை நாளில் கூட பணம் வர வாய்ப்பு உள்ளது. ஏனெனில், இதுபோன்ற முக்கிய நாட்களில்தான் பிஎம் கிசான் திட்டத்துக்கான நிதியுதவி விடுவிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தில் இ-கேஒய்சி இல்லாமல் பணம் கிடைக்காது என்பதை முதலில் நினைவில் கொள்ளுங்கள். ஆதார் அடிப்படையிலான OTP அங்கீகாரத்திற்காக, விவசாயிகள் பிஎம் கிசான் வெப்சைட்டில் ஃபார்மர்ஸ் கார்னரில் e-KYC விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அதேபோல, பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக உங்களுக்கு அருகில் உள்ள பொதுச் சேவை மையத்திற்குச் செல்ல வேண்டும். இந்த வேலையை உங்கள் மொபைல், கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் மூலமாக வீட்டிலேயே கூட முடிக்கலாம்.
மேலும் படிக்க
Share your comments