பிரதான மந்திரி ஓய்வூதிய திட்டம்
சிறு மற்றும் குறு விவசாகிகளுக்கு மத்திய அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுக படுத்திருந்தது. அதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் முதல் விவசாகிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைத்து விவசாகிகளும் இதில் இணையலாம். அவர்கள் செலுத்தும் பிரிமியம் தொகைக்கு இணையான தொகையினை அரசும் செலுத்தும். 60 வயதுக்கு பிறகு மாதம் தோறும் ரூ 3000/- ஓய்வூதியமாக வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
நாளை (செப்டம்பர் 12) பிரதம மந்திரி மோடி ராஞ்சியில் இந்த திட்டத்தை துவக்கி வைக்கிறார். 5 கோடி விவசாகிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளார்கள். விவசாகிகள் கொடுக்கும் தொகைக்கு இணையான தொகையை அரசும் செலுத்தும்.
பிரீமியம் விவரங்கள்
ஓய்வூதிய திட்டதின் சிறப்பம்சங்கள்
- 18 முதல் 40 வயதுக்குள் இருக்கும் அனைத்து சிறு,குறு விவாசகிகள் இதில் இணையலாம். 40 வயதை கடந்த விவசாயகிகள் மனைவி அல்லது பிள்ளைகள் பெயரில் இத்திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.
- PM - கிஷான் யோஜனா திட்டத்தில் இணைந்து பயன் பெறுபவர்கள் எனில் ஓய்வூதிய திட்டதிற்கான பிரீமியத்தை நேரடியாக இதிலிருந்து செலுத்திக் கொள்ளும் வசதி உள்ளது. விவசாகிகள் கையிலிருந்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
- பிரீமியத்தை மாதமாதம், 3 மாதம், 6 மாதம், 1 வருடம் என விருப்பப்பட்ட முறைகளில் செலுத்தி கொள்ளலாம்.
- திட்டத்தில் ஒருமுறை இணைந்தவர்கள் தொடர விருப்பமில்லை என்றால் 5 வருடங்கள் கழித்து கட்டிய தொகை மற்றும் அதற்கான வட்டி அனைத்தும் சேர்த்து கொடுக்கப் படும்.
- இந்த திட்டம் நிறைவடையும் முன்பே விவசாகிகள் இறந்து விட்டால் அவருடைய மனைவி இத்திட்டத்தை தொடரலாம். இல்லையெனில் கணவர் கட்டிய தொகையுடன் சிறிது வட்டியும் சேர்த்து மனைவிக்கோ அல்லது அவர்களது வாரிசுகளுக்கு போய் சேரும்.
- ஓய்வூதியம் பெற்று கொண்டிருக்கும் விவசாயி இறந்தால் அவரது மனைவிக்கு 50% அதாவது ரூ 1500/- வழங்கப்படும்.
- கணவனோ, மனைவியோ உயிருடன் இல்லையெனில் அவரது பணம் ஓய்வூதிய நிதியில் வரவு வைக்கப் படும்.
- ஒரு குடும்பத்தில் உள்ள கணவனும், மனைவியும் தனித்தனியாக விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்
- அரசு ஊழியர்கள் இந்த திட்டத்தில் சேர இயலாது.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments