பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனாவின் திட்டத்தின் கீழ் தங்களை பதிவு செய்த விவசாயிகளுக்கு மத்திய அரசு சில கூடுதல் சலுகைகள் வழங்குகிறது. இதன் மூலம் விவசாயிகள் ஆண்டுக்கு 42,000 பெறலாம்.
பி.எம் கிசான் திட்டம்
பிரதமரின் கிசான் சம்மான் நிதி(PM-Kisan Samman Nidhi Yojana) திட்டத்தின் இணைந்துள்ள விவசாயிகளுக்கு மூன்று தவணையாக ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இந்த பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது
விவசாயிகள் PM-Kisan Yojana திட்டத்தின் கீழ் கணக்கைத் திறக்கும்போது, அவர்கள் தானாகவே PM கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகிறார்கள். இது ஓய்வூதிய திட்டமாகும், இதன் மூலம் விவசாயிகள் தங்களின் ஓய்வூதிய வயதை அடையும் போது விவசாயிகளுக்கு ஓய்வூதிய வடிவில் மாதத்திற்கு 3000 ரூபாய் வீதம் வருடத்தில் 36,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
பிரதமர் கிசான் மன்தன் யோஜனா என்றால் என்ன?
பிரதமர் கிசான் மன் தன் யோஜனா என்பது நாட்டின் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்கும் அரசு திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ், ஒரு விவசாயிக்கு 60 வயதிற்குப் பிறகு மாதத்திற்கு ரூ .3000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது, அதாவது ஆண்டுக்கு ரூ .36,000. இப்போது வரை லட்சக்கணக்கான விவசாயிகள் பிரதமர் கிசான் மந்தன் யோஜனாவின் பயனைப் பெற்று வருகின்றனர்.
PM-KMY விதிமுறைகள்
18 முதல் 40 வயதுக்குட்பட்டும், இரண்டு ஹெக்டேர் வரை சாகுபடி செய்யக்கூடிய நில உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் இனையும் விவசாயி அவரின் வயதுக்கேற்ப மாதம் தோறும் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை பணம் செலுத்த வேண்டும்.
PM - Kisan பயனாளிகளுக்கான கூடுதல் நன்மை என்ன?
60 வயதை அடையும் ஒரு விவசாயிக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 3000 வழங்கப்படும் இதோடு ஆண்டுக்கு மூன்று தவணைகளில் ரூ. 6000 பி.எம் கிசான் திட்டத்தின் படி வழங்கப்படுகிறது. இந்த மூலம் 60 வயதை அடையும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மொத்தம் ரூ .42,000 கிடைக்கும். இது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
பி.எம் கிசான் திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்திற்கு என எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியில் பதிவு செய்யும் நேரத்தில் உங்கள் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் அரசாங்கத்திடம் டெபாசிட் செய்யப்படுகின்றன.
விவசாயிகள் பி.எம் கிசான் திட்டத்தில் இணையும் போது ஓய்வூதிய திட்டத்தில் இணைவதற்கான விருப்பத்தை தேர்வு செய்வதன் மூலம் நீங்கள் இந்த பயனை பெறலாம்.
மேலும் படிக்க..
விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் 15,26,534 மெட்ரிக் டன்கள் நெல் கொள்முதல்!
காற்று மாசுபாட்டை தடுக்க டிராக்டர்களுக்கும் நெறிமுறைகள் வகுப்பு!
தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்திறங்கிய 45000டன் யூரியா உரம்! விரைவில் விநியோகம் தொடக்கம்!
Share your comments