1. செய்திகள்

PM Kisan - திட்டத்தின் அடுத்த தவனை வெளியிடப்படும் தேதி அறிவிப்பு - பயனாளியின் நிலையை இங்கே சரிபார்க்கவும்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary
PM Kisan
PM Kisan - திட்டத்தின் அடுத்த தவனை வெளியிடப்படும் தேதி அறிவிப்பு

விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பி.எம் கிசான் திட்டத்தின் 18வது தவணை வரும் அக்டோபர்-5ம் தேதி விடுவிக்கப்படவுள்ளது. இந்தியா முழுவதும் 9.26 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பயம்பெறுவர்.

பி.எம் கிசான் திட்டம் (PM Kisan Scheme)

இந்தியாவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி உதவித் திட்டம் (PM kisan சம்மான் நிதி) கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் என மூன்று தவணைகளில் 4 மாதங்களுக்கு ஒருமுறை தலா 2 ஆயிரம் ரூபாய் என ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு நிதியுதவியாக வழங்கப்படுகிறது.

இந்த தொகையானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறும் அனைத்து விவசாயிகளும் தங்களுடைய மொபைல் நம்பர் மற்றும் ஆதார் எண்ணை புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது அவசியம்.

பி.எம் கிசான் திட்டத்தின் 17வது தவணையானது 9.26 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ஜூன் 18, 2024 அன்று விநியோகிக்கப்பட்டது. விவசாயிகள் PM-KISAN திட்டத்தின் தவணைகளைப் பெற விவசாயிகள் தங்கள் e-KYC கண்டிப்பாக முடிக்க வேண்டும்.

PM-KISAN போர்ட்டலில் OTP-அடிப்படையிலான eKYC மூலம் அல்லது பயோமெட்ரிக் அடிப்படையிலான eKYC க்காக அருகிலுள்ள பொது சேவை மையங்களுக்கு (CSC) சென்று இதைச் செய்யலாம்.

PM-KISAN e-KYC எப்படி செய்வது என இங்கே காணலாம்.

PM-KISAN e-KYC செயல்முறையை இன்னும் முடிக்காதவர்கள் கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றி இன்றே e-KYC செயல்முறையை முடித்துவிடுங்கள்.

  • PM Kisan-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை [https://pmkisan.gov.in/] பார்வையிடவும்.
  • முகப்புப் பக்கத்தின் வலது புறத்தில் 'விவசாயிகளின் மூலை'யைக் கண்டறியவும்.
  • ஃபார்மர்ஸ் கார்னருக்கு (Formers Corner) கீழே உள்ள பெட்டியில் உள்ள ‘e-KYC’ விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • ஆதார் இ-கேஒய்சி (Aadhar e-KYC) பக்கத்தை அணுகவும்.
  • உங்கள் ஆதார் எண் மற்றும் காட்டப்படும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, தேடல் பட்டனை கிளிக் செய்யவும்.
  • உங்கள் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு, "OTPயைப் பெறு" பட்டனை கிளிக் செய்யவும்.
  • உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP-ஐ குறிப்பிட்ட நேரத்திற்குள் உள்ளிடவும்.
  • உங்கள் PM KISAN e-KYC-ஐ வெற்றிகரமாக முடிக்க, ‘அங்கீகரிப்பிற்காக சமர்ப்பிக்கவும்’ என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

PM-Kisan வலைத்தளத்திற்கு (pmkisan.gov.in) சென்று பின்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் விவசாயிகள் பட்டியலில் உள்ள பயனாளிகளின் நிலை மற்றும் பெயர்களை சரிபார்க்கலாம்

பயனாளியின் நிலையை சரிபார்க்க...

  • pmkisan.gov.in ஐப் பார்வையிடவும்
  • 'உங்கள் நிலையை அறியவும்' என்பதைக் கிளிக் செய்யவும்
  • பதிவு எண்ணை உள்ளிட்டு கேப்ட்சா குறியீட்டை நிரப்பவும்
  • பயனாளி நிலையைக் காண 'தரவைப் பெறு-Get Details' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

பயனாளிகளின் பட்டியலை சரிபார்க்க...

  • pmkisan.gov.in ஐப் பார்வையிடவும்
  • 'பயனாளிகள் பட்டியல்' என்பதைக் கிளிக் செய்யவும்
  • மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத்தைத் தேர்ந்தெடுக்கவும்
  • பயனாளிகளின் பட்டியல் விவரங்களைப் பார்க்க, 'அறிக்கையைப் பெறு Get Report' என்பதைக் கிளிக் செய்யவும்

PM Kissan நிதி தொடர்பான மேலும் தகவல்களுக்கும், ஹெல்ப்லைன் & விண்ணப்ப செயல்முறை உதவிக்கு, விவசாயிகள் 155261 அல்லது 011-24300606 என்ற இலவச உதவி எண்களை அழைக்கலாம்.

பிரதமர் கிசான் சம்மன் நிதிக்கு விண்ணப்பிக்க...

  • pmkisan.gov.in ஐப் பார்வையிடவும்
  • 'புதிய விவசாயி பதிவு' என்பதைக் கிளிக் செய்யவும்
  • ஆதார் எண்ணை உள்ளிட்டு கேப்ட்சாவை நிரப்பவும்
  • விண்ணப்ப படிவத்தில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்யவும்
  • எதிர்கால குறிப்புக்காக பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து சப்மிட் பட்டனை அழுத்தவும்.

உங்கள் விவரங்கள் சரிபார்த்த பின்னர், பயனாளிகள் நிலைமையில் பதிவேற்றம் செய்யப்படும். உங்கள் பயனாளிகள் பட்டியலில் பெயர் வரும் பட்சத்தில் நீங்களும் பிஎம் கிசான் நிதியை பெருவீர்கள்.

Read more 

Kisan Ki Baat - விவசாயிகளுக்காக புதிய அறிவிப்பை வெளியிட்ட ஒன்றிய அமைச்சர்!

உள்ளூா் பாரம்பரியப் பயிா் உற்பத்தி அதிகரிப்பு அவசியம்! - பயிர் பாதுகாப்புதுறை வலியுறுத்தல்!

English Summary: PM Kisan - Scheme Next Instalment Release Date announced! Published on: 26 September 2024, 01:10 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.