பிரதமரின் கிசான் திட்டத்தில் தமிழகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், முறைகேடு செய்தவர்களிடம் இருந்து இதுவரை 130 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பிரதமரின் கிசான் சம்மான் நிதி (PM-Kisan Samman Nidhi Yojana) திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மூன்று தவணையாக ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இந்த பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கான 6-வது தவணையாக ரூ.17,793 கோடி அண்மையில் பிரதமர் மோடியால் விடுவிக்கப்பட்டது.
பி.எம் கிசான் திட்டத்தில் முறைகேடு
இந்நிலையில், தமிழகத்தின் திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் விவசாயிகள் அல்லாதோரும், தகுதியில்லாதவர்கள் பலரும் இந்த திட்டத்தில் முறைகேடாகச் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், பி.எம் கிசான் திட்டத்தில் விவசாயிகளைச் சேர்க்கும் பணிகள் தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டது. வேளாண் துறை அதிகாரிகள் சல்லடை போட்டு நடத்திய இந்த விசாரணையில், தகுதியில்லாதவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்ட 130 கோடி ரூபாய் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வடதமிழகம்
இவர்களில் பெரும்பாலானோர் வட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அதிகாரிகள் சிலர் லஞ்சம் வாங்கிக்கொண்டு இந்த முறைகேட்டை அனுமதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
சிக்கியது எப்படி?
இந்த திட்டத்திற்கு விவசாயிகள் ஆன்லைனில் தங்களது நில ஆவணங்கள் மற்றும் ரேஷன் அட்டை தொடர்பாக அளித்திருந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, தகுதியில்லாதவர்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுகொண்டனர்.
சாபகுடி பணிகள்
தமிழகத்தைப் பொருத்தவரை தற்போது நெல், சிறுதானியங்கள், தானியங்கள் மற்றும் பயறு வகைகள் மொத்தம் 23 .7 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளன. இதில், நெற்பயிர் மட்டும 13 லட்சம் ஹெக்டேரிலும், சிறுதானியங்கள் 7.6 லட்சம் ஹெக்டேரிலும், பயறு வகைகள் 3 லட்சம் ஹெக்டேரிலும் பயிரிடப்பட்டுள்ளன.
டெல்டா நெல் சாகுபடி
காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டும் 5 லட்சம் ஹெக்டேரில் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த புள்ளிவிவரங்கள் வரும் நாட்களில் மேலும் அதிகாரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க...
2 ஆயிரத்திற்கு ரூ.2 ஆயிரம் - படைப்புழுத்தாக்குதலால் கவலையில் விவசாயிகள்!
கோழிப்பண்ணை அமைக்க 20 லட்சம் வரை மானியம் - உதவும் தேசியக் கால்நடைத் திட்டம்!
Share your comments