1. செய்திகள்

பெரும்பான்மையை இழந்து ராஜினாமா செய்கிறார் பிரதமர்!

T. Vigneshwaran
T. Vigneshwaran
PM Resigns

பாகிஸ்தான் அரசு பெரும்பான்மையை இழந்ததை தொடர்ந்து, பிரதமர் இம்ரான் கான் இன்று ராஜினாமா செய்ய உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது நாளை(வியாழக்கிழமை) விவாதம் நடக்கிறது. அதை தொடர்ந்து 3-ம் தேதி ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக எதிர்க்கட்சிகளுக்கு தனது பலத்தை காட்டும் விதமாக கடந்த 27-ந்தேி தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரதமர் இம்ரான்கான் பிரமாண்ட பேரணியை நடத்தினார். பேரணியில் பேசிய இம்ரான்கான் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் தங்களுக்கு இருக்கும் ஆதரவை காட்டும் விதமாக நேற்று இஸ்லாமாபாத்தில் பிரமாண்ட பேரணியை நடத்தினர். இந்த பேரணியில் பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு இம்ரான்கான் மற்றும் அவரது அரசை குற்றம் சாட்டி கடுமையாக பேசினர்.

இந்தநிலையில், இம்ரான்கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சிக்கு ஆதரவளித்து வந்த முட்டாஹிதா குவாமி இயக்கம் கட்சி (MQM-P) ஆதரவை விலக்கி கொண்டுள்ளது. தொடர்ந்து, எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு (PPP) ஆதரவு அளிப்பதாக முட்டாஹிதா குவாமி இயக்கம் அறிவித்துள்ளது. மேலும், முட்டாஹிதா குவாமி கட்சியை சேர்ந்த அமைச்சர்களும் இன்று 12.30 மணிக்கு பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து பாகிஸ்தானில் இம்ரான்கானின் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பே இம்ரான்கான் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பெரும்பான்மையை இழந்துள்ளதால் இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை இன்று ராஜினமா செய்வார் என்று கூறப்படுகிறது.

முட்டாஹிதா குவாமி இயக்கம் கட்சியின் அறிவிப்பால் எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக உயர்ந்து இம்ரான்கான் அரசின் பலம் 164 குறைந்துள்ளது.

மேலும் படிக்க

நற்செய்தி! ஏப்ரல் 1ம் தேதி முதல் இலவச கடன் வழங்கப்படும்

English Summary: PM resigns after losing majority Published on: 30 March 2022, 07:46 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.