நடைபாதை வியாபாரிகளை மகிழ்விக்கும் வகையில், அவர்களுக்கானத் கடன் திட்டத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வியாபாரிகளின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில், மத்திய அரசு சிலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒருபகுதியாக, நம்மை வாட்டி வதைத்த கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் நடைபாதை வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே அவர்களுக்கு உதவுவதற்காக பிரதமர் ஸ்வநிதி (PM SVANidhi) திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், இந்த திட்டத்தை அடுத்த ஆண்டு, அதாவது 2024ஆம் ஆண்டு டிசம்பர் வரை பிரதமர் ஸ்வநிதி திட்டத்தை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய கேபினட் கூட்டம் நடைபெற்றது. இதில் ஸ்வநிதி திட்டத்தை 2024 டிசம்பர் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
PM SVANidhi திட்டம்
பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் நடைபாதை வியாபாரிகளுக்கு பிணையில்லா கடன் வழங்கப்படுகிறது.கொரோனா பாதிப்பு காலத்தில் வியாபாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்துக்கு ஆதரவு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.
பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் 5000 கோடி ரூபாய்க்கு கடன் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது ஸ்வநிதி திட்டம் 2024 டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் 8100 கோடி ரூபாய்க்கு கடன் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
31.9 லட்சம் கடன்
இதனால் சுமார் 1.2 கோடி பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் மாதம் வரை பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் 31.9 லட்சம் பேருக்குக் கடன் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 2931 கோடி ரூபாய்க்கு 29.6 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டுவிட்டன.
மேலும் படிக்க...
பெண்களைக் குறிவைத்துத் தாக்கும் கால்சியம் குறைபாடு!
பிச்சை எடுத்து அன்னதானத்திற்கு ரூ1 லட்சம் நிதி- பிரமிப்பூட்டிய பாட்டி!
Share your comments