நம் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி, 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' கொண்டாடும் நேரத்தில்,மக்கள் தங்கள் தேசபக்தியை வெளிப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் சுயவிவர படத்தில் தேசியக்கொடியை வைப்பது, வீடுகள் தோறும் கொடி ஏற்றுவது என்று செய்து வருகின்றனர்.
இந்திய தேசியக் கொடியின் பயன்பாடு, காட்சிப்படுத்தல் மற்றும் ஏற்றுதல் தொடர்பான சட்டங்கள் மற்றும் மரபுகளை இந்தியக் கொடிக் குறியீடு கொண்டுள்ளது. தனியார், பொது மற்றும் அரசு நிறுவனங்கள் தேசியக் கொடியை எவ்வாறு கையாளவேண்டும் வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது.குடிமக்கள் தேசியக் கொடியை எளிதாகப் பெறுவதற்காக, இந்தியக் கொடிக் குறியீடு 2022 அரசாங்கத்தால் திருத்தப்பட்டுள்ளது.
பிரதமர் சொன்ன 'ஹர் கர் திரங்கா' படி எல்லார் வீடுகளிலும் மூவர்ணக்கொடி ஏற்றப்படுகிறது. அப்படி ஏற்றும் மக்கள் சில விஷயங்களை கவனத்தில் கொண்டு சரியான முறையில் கொடியை ஏற்ற வேண்டும். அவை...
தேசியக் கொடியை எப்போது ஏற்றலாம்?
இந்திய அரசு சமீபத்தில் செய்த திருத்தங்கள்படி, தேசியக் கொடியை இரவும் பகலும் ஏற்ற அனுமதிக்கிறது. திறந்த வெளியிலோ அல்லது பொதுமக்களின் வீட்டிலோ ஏற்றலாம்.
மேலும் படிக்க
Share your comments