1. செய்திகள்

அஞ்சல் துறை தேர்வு 2023: தமிழ்நாட்டு மாணவர்களுக்கு குட் நியூஸ்!

R. Balakrishnan
R. Balakrishnan
Post Office Recruitment

இந்தியா முழுவதும் 40000 கிராமின் டாக் சேவக் (GDS) காலியிடங்களுக்கு பணி நியமனங்களை அஞ்சல் துறை மேற்கொள்ளவுள்ளது. அவற்றில் தமிழ்நாட்டில் மட்டும் 3167 காலியிடங்கள் உள்ளன. 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படும். ஆகவே ஆன்லைன் விண்ணப்பத்தில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் பாட வாரியாக கேட்கப்பட்டு உள்ளது.

தெரிவு மொழி

மாநில பாட முறையில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களே இருக்கின்றன. ஆனால், ஆன்லைன் விண்ணப்பத்தில் 6 ஆவது பாடமும் இடம் பெற்றுள்ளது. அது ‘தெரிவு மொழி’ என்பது. மற்ற மாநிலங்களில் இது இருக்கிறது. ஆகையால் பிற மாநில தேர்வர்களுக்கு பிரச்சினை இல்லை. இரு மொழித் திட்டம் நடைமுறையில் உள்ள தமிழ்நாட்டில் 6 ஆவது பாடமே இல்லை. ஆனால், 6 ஆவது பாட விவரங்களை நிரப்பாவிட்டால் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய ஆன்லைன் முறைமை விடவில்லை. இதனால், தமிழ்நாட்டு மாணவர்கள் தவித்து வந்தனர்.

அஞ்சல் துறை வேலைவாய்ப்பு

மேற்கண்ட பிரச்சனைக்கு கண்டனம் தெரிவித்த மதுரை எம்.பி., சு.வெங்கடேசன், ஜனவரி 27 முதல் ஆன்லைன் விண்ணப்பங்கள் அனுப்பலாம் என்றாலும், அதைச் செய்ய முடியாமல் தமிழ்நாடு மாநில தேர்வு முறைமையில் 10 ஆம் வகுப்பு தேறிய தேர்வர்கள் தவித்து வருகிறார்கள். ஜனவரி 27 விண்ணப்ப தேதி ஆரம்பித்து ஒன்பது நாட்கள் ஓடி விட்டன. இன்னும் கடைசி தேதியான பிப்ரவரி 16 க்கு 10 நாட்களே உள்ளன. இன்னும் தீர்வு இல்லை. எனவே, உடனடியாக ஆன்லைன் விண்ணப்பத்தில் 6 ஆவது பாட விவரம் கட்டாயமாக கேட்கப்படுவது மாற்றப்பட வேண்டும். 9 நாட்கள் வீணாகி இருப்பதால் விண்ணப்ப காலக்கெடு நீட்டிக்கப்பட வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய பிப்ரவரி 17 முதல் 19 வரை தரப்பட்டுள்ள காலமும் நீட்டிக்கப்பட வேண்டும். இது துறையின் தவறு என்பதால் இந்த குறிப்பிட்ட காரணத்தால் எந்தவொரு விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டு விடக் கூடாது என கோரிக்கை விடுத்திருந்தார்.

பிரச்சனைக்குத் தீர்வு

இதற்கு பதிலளித்த அஞ்சல் பொது நிர்வாக துணை இயக்குனர் ராசி சர்மா அவர்கள், இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும், 6 வதாக உள்ள "தெரிவு மொழி" பகுதி தமிழ்நாடு தேர்வர்களுக்கு தடையாக இல்லாத வகையில் மாற்றப்படும் என்றும், விண்ணப்ப கடைசி தேதி மூன்று நாட்கள் நீட்டிக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாடு தேர்வர்கள் தீர்வைப் பயன்படுத்தி உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

ரெப்போ வட்டி உயர்வு: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: வருகிறது உத்தரவாத பென்சன் திட்டம்!

English Summary: Postal Department Exam 2023: Good News for Tamil Nadu Students! Published on: 08 February 2023, 03:38 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.