டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதய அறுவை சிகிச்சைக்கு பிறகுப் பூரண குணமடைந்து தமது மாளிகைத் திரும்பியுள்ளார்.
நெஞ்சுவலி (chest pain)
75 வயதாகும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடந்த மார்ச் 26-ந் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
எய்ம்ஸ்க்கு மாற்றப்பட்டார் (Transferred to Aims)
இதைத் தொடர்ந்து டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியிலும், பின்னர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியிலும் அவர் அனுமதிக்கப்பட்டார்.
பைபாஸ் சிகிச்சை (Bypass treatment)
ராம்நாத் கோவிந்துக்கு கடந்த மார்ச் 30-ந் தேதி எய்ம்சில் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார்.
மருத்துவமனை தகவல் (Hospital information)
பின்னர் ராம்நாத் கோவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும், அவரது உடல்நலம் மேம்பட்டு வருவதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ராம்நாத் கோவிந்த் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
இதய அறுவை சிகிச்சை முடிந்து நான் குடியரசுத்தலைவர் மாளிகைக்கு திரும்பியுள்ளேன்.
அனைவரின் வாழ்த்துகள் மற்றும் பிராத்தனையாலும், ராணுவ, எய்ம்ஸ் ஆஸ்பத்திரி மருத்துவர்கள், செலவிலியர்களின் (Doctors and Nurses) சிறப்பான கவனிப்பாலும் நான் விரைவாகக் குணமடைந்துள்ளேன்.
அனைவருக்கும் நன்றி. மீண்டும் வீடு திரும்பியதில் மகிழ்ச்சி.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
உங்கள் வங்கி கணக்கில் LPG சிலிண்டர் மானியம் ஏறவில்லையா? அப்போ இதை செய்யுங்க!
திருக்குறள் சொன்னால் Earphone இலவசம்.. அசத்தும் மொபைல் ஷாப்!!
போராட்டத்தைக் கைவிட்டால் பேச்சுவார்த்தை- விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு!
Share your comments