மறைந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அஞ்சலி செலுத்தினார்.
இங்கிலாந்து நாட்டின் தலைவரான ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ம் தேதி மரணமடைந்தார். அவரது, மறைவுக்கு உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
தற்போது, வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் வைக்கப்பட்டுள்ள ராணியின் உடலுக்கு ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் இருந்து 500க்கும் அதிகமான முக்கிய விருந்தினர்கள் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்கும் நிலையில், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் வைக்கப்பட்டுள்ள ராணியின் உடலுக்கு இந்தியாவின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தினார்.
இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு இந்திய நேரப்படி திங்கள்கிழமை காலை 11 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் வரிசையில் நின்று ஏமாற்றம் அடைய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு வெஸ்மின்ஸ்டர் அபேவுக்கு ராணியின் உடல் கொண்டு செல்லப்பட்ட இறுதி சடங்கு ஆராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து குதிரை பூட்டிய ராணுவ வண்டியில் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, வின்ஸ்டரில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் கணவர் பிலிப் உடல் வைக்கப்பட்டுள்ள கல்லறை அருகே அடக்கம் செய்யப்படுகிறது.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் இங்கிலாந்து முழுவதும் உள்ள பூங்காங்கள், திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இங்கிலாந்து நேரப்படி இரவு 8 மணிக்கு நாடு முழுவதும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது.
மேலும் படிக்க:
பரவும் காய்ச்சல்: பள்ளிகளுக்கு விடுமுறையா இல்லையா?
TNPSC குரூப் 3 தேர்வு, விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்
Share your comments