1. செய்திகள்

அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட உத்தரவு!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை மூட தொடக்கக் கல்வித்துறை மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக தொடக்கக் கல்வி இயக்குநர் பிறப்பித்துள்ள உத்தரவில், தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும், அரசு நிதியுதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், சுயநிதியில் செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் இளம் மழலையர் பள்ளிகள் ஆகியவை சார்பாக தொடக்க அனுமதி, அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகள் சார்பாக விவரங்களை அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

அங்கீகாரம் பெறுவதற்குரிய முழுமையான வடிவில் கருத்துரு அளிக்க இயலாத பள்ளிகளை உடனடியாக இக்கல்வி ஆண்டுடன் மூடுதல் சார்ந்து உரிய விதிமுறைகளின்படி அப்பள்ளியில் பயலும் மாணவ, மாணவிகளை வேறு பள்ளியில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். துவக்க அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் அனைத்து இளம் மழலையர் பள்ளிகள், நர்சரி மற்றும் பள்ளிகள், சுயநிதி தொடக்க, நடுநிலை பள்ளிகள், உதவிபெறும் தொடக்கநிலை பள்ளிகளை மூடுதல் சார்ந்து விதிமுறைகளின்படி, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

துவக்க அங்கீகாரம், தொடர் அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் செயல்படுமானால் , வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரே பொறுப்பேற்க நேரிடும். எனவே, அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகள் மீது பள்ளி வாரியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரத்தினை ஜூன் 20க்குள் இவ்வியக்கத்திற்கு அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க பரிந்துரை.. டாஸ்மாக் கடைகள் திறப்பு?

English Summary: - Primary Education Department of TN Order to close schools operating without accreditation Published on: 11 June 2021, 06:38 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.