1. செய்திகள்

இளமையில் டீ விற்ற ரயில்வே வாட்நகர் இரயில் நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

R. Balakrishnan
R. Balakrishnan
Credit : Dinamalar

குஜராத்தில் புனரமைக்கப்பட்ட வாட்நகர் ரயில்வே ஸ்டேஷனை, அங்கு இளமையில் 'டீ' விற்ற நினைவின் நெகிழ்ச்சியுடன், பிரதமர் மோடி (PM Modi) இன்று திறந்து வைத்தார்.

டீ கடை

குஜராத்தில் மெஹ்சானா மாவட்டம், வாட் நகரில் உள்ள ரயில்வே ஸ்டேஷனில், பல ஆண்டுகளுக்கு முன், மோடியின் தந்தை டீ கடை நடத்தி வந்தார். அப்போது இளம் வயது மோடி, தந்தைக்கு உதவியாக ரயில்வே ஸ்டேஷனில் டீ விற்பனை செய்து வந்தார். பிரதமரான பின், மோடி பலமுறை இதை நினைவு கூர்ந்துள்ளார்.

வாட்நகர் ரயில்வே ஸ்டேஷன்

இந்நிலையில், வாட்நகர் ரயில்வே ஸ்டேஷன், தற்போது ரூ. 8 கோடி செலவில் ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு நிகரான வசதிகளுடன் புனரமைக்கப்பட்டடுள்ளது. இந்த ஸ்டேஷனை பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' (Video Conference) வாயிலாக திறந்து வைத்தார்.

இவற்றை தவிர புதுப்பிக்கப்பட்ட காந்திநகர் ரயில்வே ஸ்டேஷன், ஆமதாபாத் அறிவியல் நகரில் புதிய பிரிவுகள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

மேலும் படிக்க

கண்ணாடி இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் வாரண்டி ரத்து: ஐகோர்ட் அதிரடி

ஜூலை 19 இல் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் வெளியீடு: இணையதளங்களில் பார்க்கலாம்!

English Summary: Prime Minister Modi inaugurated the Watnagar Railway Station, which sold tea at a young age Published on: 17 July 2021, 05:44 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.