தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்ப் புத்தாண்டு இன்று (சித்திரை 1) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர்எடப்பாடி பழனிசாமி (CM Edapaddy Palanisamy), துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழகத்து சகோதர, சகோதரிகளுக்கும், உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும். புத்தாண்டு, ஒவ்வொருவரின் வாழ்விலும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மகிழ்ச்சியையும் நிறைக்க, இந்த மகிழ்ச்சியான திருநாளில் பிராத்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கனிகளுடன் வழிபாடு
உலகம் முழுவதும் வசித்து வரும் தமிழர்கள் சித்திரை முதல் நாளில், தமிழ் புத்தாண்டை மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளுடன் வழிபாடு செய்து கொண்டாடுகிறார்கள். சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு கொண்டாடும் இந்த பருவத்தில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளும் கிடைக்கும் பருவமாகவும் இருக்கிறது. அதனால், மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை ஒரு தட்டிலும், நாணயங்கள், தங்கம், வெள்ளி நகைகள், கண்ணாடி, பூக்கள், ஆகியவை வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. இது வருகிற ஆண்டில் தனிப்பட்ட வாழ்க்கையிலும், குடும்பத்திலும் நல்ல அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் ஏற்படுத்தும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
இலாபகரமாக மாட்டுப்பண்ணையை வழிநடத்த சில டிப்ஸ்!
கொரோனா வைரஸ் பரவல் அச்சம்! தடுப்பூசி போடுவோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Share your comments