நம் நாட்டின் 73 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடியரசு தின விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடியின் ஆடை அலங்காரம் அனைவரையும் ஈர்த்துள்ளது. குடியரசு தின விழாவில் பிரதமர் மோடி (Prime Minister Modi) உத்தர்கண்ட் மாநில பாரம்பரிய தொப்பி மற்றும் மணிப்பூர் மாநில துண்டுடன் குடியரசு தின விழாவில் கலந்து கொண்டார். குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் வித விதமான தலைப்பாகை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளார். இது பலராலும் கவனிக்கப்படும். கடந்த ஆண்டு குடியரசு தின விழாவில் குஜராத்தில் உள்ள ஜாம்நகர் அரச குடும்பத்தினர் பரிசாக அளித்த தலைப்பாகையுடன் மோடி பங்கேற்றார்.
வித்தியாசமான கெட்டப் (Different Get-up)
இந்தாண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கு முன்னர் மோடி, தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த போது, உத்தர்கண்ட் மாநிலத்தின் பாரம்பரிய தொப்பியை அணிந்திருந்தார். அந்த தொப்பியில் அம்மாநில மலர் பிரம்மக்கமலம் பொறிக்கப்பட்டிருந்தது. மணிப்பூர் மாநில பாரம்பரிய துண்டையும் மோடி தோளில் அணிந்திருந்தார்.
இதுவும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கேதார்நாத் செல்லும் போது எல்லாம், பிரதமர் மோடி, பிரம்மகமலம் மலர் மூலம் பூஜை செய்வதை வழக்கமாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மரியாதை செலுத்தினார் (Respected)
டில்லியில் உள்ள தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்தியா தனது 73-வது குடியரசு தினத்தை கொண்டாடி வருகிறது. இந்த இனிய நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கு எனது வாழ்த்துகள் ஜெய் ஹிந்த் என் பிரதமர் மோடி வாழ்த்துகளை பரிமாறினார்.
மேலும் படிக்க
கடுங்குளிரிலும் தேசியக் கொடியை ஏந்தி குடியரசு தின விழா கொண்டாட்டம்!
குடியரசு தின விழா: தேசியக் கொடியை ஏற்றி, முப்படைகளின் மரியாதையை ஏற்றார் ஜனாதிபதி!
Share your comments