அடுத்த வாரம் நடைபெற உள்ள, குடியரசு தின விழாவில் பிரதமரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து டெல்லியில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குடியரசு தினம் (Republic Day)
நாட்டின் 73-வது குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. டெல்லி ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் ஜனாதிபதி மூவர்ணக் கொடியை ஏற்றி வைக்கிறார்.
தலைவர்கள் பங்கேற்பு
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணைத்தலைவர் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
உயிருக்கு அச்சுறுத்தல் (Threat to life)
இந்தநிலையில் குடியரசு தின கொண்டாடட்டத்தைச் சீர்குலைக்க தீவிரவாதிகள் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியிருப்பதாகவும், பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சதித்திட்டம் (Conspiracy)
பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தைச் சேர்ந்தக் குழுக்களிடம் இருந்து இந்த அச்சுறுத்தல் வந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உயர் பதவியில் இருக்கும் பிரமுகர்களைக் குறி வைத்தும், பொதுக்கூட்டங்கள், முக்கிய நிறுவனங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் நெரிசலான இடங்களையும் இலக்காக வைத்து உள்ளனர்.
தீவிரவாத அமைப்புகள் (Terrorist organizations)
லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹர்கத்-உல்-முஜாகிதீன், ஹிஸ்புல் முஜாகிதீன், எதிர்ப்பு குழுக்கள் உள்ளிட்டத் தீவிரவாத அமைப்புகள் இதன் பின்னணியில் இருக்கலாம் எனவும் உளவுத்துறை தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
குடியரசு தின விழாவில் பிரதமரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து டெல்லியில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தடை (Prohibition)
பொழுதுபோக்குக்காக பறக்க விடப்படும் பேரா கிளைடர், பாரா மோட்டர், ஆளில்லாத சிறிய ரக ட்ரோன்கள், சிறிய ரக விமானங்கள், ரிமோட் மூலமாக இயக்கப்படும் சிறிய ரக விமானங்கள், சூடான காற்று பலூன்கள் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு ரத்தாகுமா?
Share your comments