வருமான வரிக்கான புதிய இணையதளத்தில் வருமான வரி தாக்கல் செய்வதில் தொடர்ந்து சிரமங்கள் நீடித்து வருவதால், அதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இன்போசிஸ்
கடந்த ஜூன் மாதம் வருமான வரிக்கான புதிய இணையதளம் ஆரம்பிக்கப்பட்டது. இன்போசிஸ் நிறுவனத்திடம் இப்பணிகள் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
புதிய இணையதளம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தவுடன் லட்சக்கணக்கான பயனர்களால் அதில் உள்நுழைய முடியவில்லை. மேலும் வருமான வரித் தாக்கலில் ஏராளமான சிக்கல்களைச் சந்தித்தனர்.
செப்., 31 வரை
இதனால் இன்போசிஸ் நிறுவனம் மற்றும் மத்திய நிதியமைச்சகத்தை விமர்சிக்கத் தொடங்கினர். இன்போசிஸ் சி.இ.ஓ.,வுக்கு சம்மன் அனுப்பி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இதுகுறித்து விசாரணையும் நடத்தினார். இதனையடுத்து வருமான வரித் தாக்கலுக்கானக் காலக்கெடு செப்., 31 ஆக நீட்டிக்கப்பட்டது.
டிச.31 வரை நீட்டிப்பு (Extension until Dec. 31)
இந்நிலையில் நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட புதிய அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் கூறிய சிரமங்களைக் கவனத்தில் கொண்டு 2021 - 22 ஆண்டுக்கான ஐ.டி., ரிட்டனுக்கான (IT Return) கால அவகாசம் டிசம்பர் 31, 2021 வரை நீட்டிக்கப்படுகிறது. 2020 - 21 ஆண்டுக்கான தணிக்கை அறிக்கையைச் சமர்பிக்கும் தேதி 31 அக்டோபரிலிருந்து, அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
காலக்கெடு நீட்டிப்பு (Deadline extension)
சர்வதேசப் பரிவர்த்தனை அல்லது குறிப்பிட்ட உள்நாட்டுப் பரிவர்த்தனைக்கு கணக்காளரிடமிருந்து அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டியத் தேதி அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
தணிக்கைக்குத் தேவைப்படும் வருமான கணக்கு தாக்கலுக்கான கடைசி தேதி அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments