குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்காத மாநிலங்களுக்கு 100 நாள் வேலைத் திட்ட நிதி வழங்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்த முடிவால், சில மாநிலங்களில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அடுத்த நிதியாண்டு முதல் 80% மாவட்டங்களுக்காவது 100 வேலை திட்ட குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்காத மாநிலங்களுக்கு திட்டத்துக்கான நிதி வழங்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் தகவல்படி குஜராத், அருணாசலப் பிரதேசம், கோவா, தெலங்கானா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார், லட்சத்தீவுகள் போன்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒரு குறைதீர்ப்பு அதிகாரி கூட இதுவரை நியமிக்கப்படவில்லை.
அதே நேரத்தில், சில மாநிலங்களில் ஒரிரு மாவட்டங்களுக்கு மட்டும் குறைதீர்ப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக, ராஜஸ்தான், மேற்கு வங்கம், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் தலா 4 மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 80% மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பு அதிகாரி நியமிக்காத மாநிலங்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதி அடுத்த நிதியாண்டு முதல் வழங்கப்படாது என மத்திய அரசு அதிரடியாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் நாகேந்திர நாத் சின்ஹா கூறுகையில், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் எல்லா மாநிலங்களிலும் குறைதீர்ப்பு அதிகாரி நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 80% மாவட்டங்களிலாவது குறைதீர்ப்பு அதிகாரி இருக்க வேண்டும்.
எனவே அடுத்த நிதியாண்டு முதல் குறைந்தபட்ச அளவான 80% மாவட்டங்களில் குறைதீர்ப்பு அதிகாரி நியமிக்காத மாநிலங்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசின் இந்த முடிவால், சில மாநிலங்களில் பெரும் நிதிச்சுமையை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
மஹாசிவராத்திரி விழா - ஈஷாவில் கோலாகலக் கொண்டாட்டம்!
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் - ஒரு பார்வை!
Share your comments