1. செய்திகள்

மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கான நடைமுறைகள் !!

Daisy Rose Mary
Daisy Rose Mary
agricultural machinery at subsidized prices

விவசாயத்தில் வேலையாள்கள் பற்றாக்குறையைத் தவிா்க்கவும், உரிய காலத்தில் பயிா் சாகுபடி செய்யவும், விவசாயிகளின் நிகர லாபத்தை உயா்த்தவும் வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

வேளாண் பொறியியல் துறை சார்பில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ், டிராக்டர், பவர் டில்லர், புதர் அகற்றும் கருவிகள் உள்ளிட்ட வேளாண் கருவிகள் வாங்க சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியமாக வழங்கப்படும்.

பதிவு செய்வது எப்படி

வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற முதலாவதாக விவசாயிகள் "உழவன் செயலி"-யில் UZHAVAN APP பதிவுசெய்ய வேண்டும். பின்னா் அவா்களது விண்ணப்பம் மத்திய அரசின் இணையதளமான www.agrimachinery.nic.in-ல் இணைக்கப்படும்.

மானியம் பெறுவதற்கான நடைமுறைகள்

விவசாயிகள் தங்களுக்குத் தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளையும் ஒப்புதல் வழங்கப்பட்ட முகவரையும் (Dealer) தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். விவசாயிகள் முகவரின் விற்பனை விலையை பேச்சு வார்த்தை மூலம் பேரம் பேசி குறைத்திடலாம். குறைக்கப்பட்ட விலைக்குரிய மானியம் இணையதளத்திலேயே கணக்கிடப்படும்.  

குறிப்பிட்ட வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் இலக்கு முடிவுற்ற பின்னர் விவசாயிகள் அதே இயந்திரம் அல்லது கருவியை தேர்வு செய்தால் அவர் 1,2,3 என எண்ணிடப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் சோக்க்ப்படுவர்.

ஏற்கனவே 2019-20 ஆம் ஆணடில் பதிவு செய்யப்பட்ட மூதுரிமை விண்ணப்பங்கள் நடப்பு ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. எனவே இவ்வாண்டிற்கு விண்ணப்பங்கள் புதிதாக பதிவு செய்யப்பட வேணடும்.

agricultural machinery at subsidized prices

ஒரு நிதியாண்டில் தனக்குத் தேவைப்படும் ஏதாவது இரண்டு வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளை மட்டுமே மானிய விலையில் விவசாயிகள் வாங்கிட இயலும்.
அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் அதே வகையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை மானிய விலையில் வாங்கிட இயலும்.

உதவி செயற் பொறியாளர், உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர் ஆகியோர் விவசாயிகளின் நிலத்திற்கு நேரில் சென்று விவசாயிகள் வாங்கிய வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை ஆய்வு செய்வர்.

மேலும் விவசாயி மற்றும் விற்பனை செய்த முகவரால் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து விபரங்கள் மற்றும் ஆவணங்கள் வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்களால் சரிபார்க்கப்படும்.

அதன் பின்னார் விவசாயிக்கு வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சம்பந்தப்பட்ட விவசாயி மற்றும் ஆய்வு அலுவலர் ஆகியோருடன் கூடிய (Geotagged) புகைப்படத்தினை இணையதளத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் ஆய்வு அலுவலரால் பதிவேற்றம் செய்யப்படும்.

மேலும் சரிபார்ப்பு பட்டியல் (Check slip) மற்றும் அலுவரின் குறிப்புரையும் 10 நாட்களுக்குள் வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்களால் பதிவேற்றம் செய்யப்படும்.

மேற்குறிப்பிட்ட ஆய்வுகள் அனைத்தும் முடிந்த பின்னர் இறுதியாக விவசாயியின் வங்கி கணக்கில் உரிய மானியமானது ஆய்வு முடிந்த 10 நாட்களுக்குள் வரவு வைக்கப்படும்.

திருநெல்வேலிக்கு ரூ. 195 லட்சம் ஒதுக்கீடு

வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தில் தனிப்பட்ட வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் மானியத்தில் பெற்றிட ஏதுவாக திருநெல்வேலி மாவட்டத்திற்கு 43 டிராக்டர்கள், 3 நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரங்கள், 9 ரோட்டவேட்டர் என்று அழைக்கககூடிய சுழற்கலப்பைகள், 11 பவர் டில்லர்கள் 2 எண்கள் அறுவடை இயந்திரங்கள் வாங்கி கொள்ள நடப்பாண்டில் ரூ.194.52 இலட்சங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளாக திருநெல்வேலி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைக்க மானியம் - திருநெல்வேலி ஆட்சியர் அழைப்பு!!

வேளாண் இயந்திரங்களை கொள்முதல் செய்யவும், வாடகை மையம் அமைக்கவும் அரசு மானியம்!!

தென்னந்தோப்பில் மீன் குட்டை அமைப்பவர்களுக்கு ரூ.25000 வரை மானியம்!!

 

English Summary: Procedures for purchasing agricultural machinery at subsidized prices Published on: 21 August 2020, 05:45 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.