அரசி கொள்முதல் தொடர்பான அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
முன்கூட்டிய அறிவிப்பு ( Early Announcement)
வழக்கமாக அக்.1ம் தேதி அரிசி கொள்முதல் தொடங்கப்படும் நிலையில், அனைத்து மாநிலங்களிலும் முன்கூட்டியே தொடங்குவதற்கான அறிவிப்பை மத்திய உணவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் தானிய கொள்முதல் பணிகள் செப்.26ம் தேதியே தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.அதாவது இவ்விரு மாநிலங்களிலும், நெல் அறுவடை முடிந்து, சந்தைக்கு வந்துவிட்டபடியால், அங்கு, உடனடியாக கொள்முதலை மேற்கொள்ள, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
சுமார் 13.77 லட்சம் டன் தானியங்கள், எண்ணெய் வித்துக்களை கொள்முதல் செய்ய மத்திய வேளாண்துறை அனுமதி அளித்துள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழகம், தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வேளாண் மசோதாவுக்கு எதிராக, நாட முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
எந்தெந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை கொட்டும் - விபரம் உள்ளே!!
கோழிகளைத் தாக்கும் வெள்ளைக் கழிச்சல் நோய்- நிவாரணம் தரும் இயற்கை மருந்துவம்!
Share your comments