சம்யுக்த் கிசான் மோர்ச்சா பிளவு: வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்காக விவசாயிகள் இன்று (ஆகஸ்ட் 22) தில்லியில் உள்ள ஜந்தர்-மந்தரை அடையும் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். போலீஸ் தரப்பில் இருந்து அனுமதி பெறப்படவில்லை என்றாலும், எங்களை தடுத்தால் போராட்டம் நடத்துவோம் என சம்யுக்து கிசான் மோர்ச்சா (SKM) தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ஐக்கிய விவசாயிகள் முன்னணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, போராட்டத்தால் நிலவும் பதற்றத்தை தடுக்க, தில்லி நோக்கி வரும் விவசாயிகள் வழியிலேயே மறித்து கைது செய்கின்றனர் போலீசார். மேலும், இந்த போராட்டத்தினால் கண்காணிப்பு பணி தீவிரம் அடைந்துள்ளதால், சாலையில் நெரிசல் அதிகமாகிறது என்பது குறிப்பிடதக்கது.
2 சிறப்பு கமிஷனர்கள் கண்காணிப்பு
தில்லி மகாபஞ்சாயத்து நிகழ்வில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதை தவிர்க்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். தில்லி எல்லைகளை கண்காணிக்க சட்டம், ஒழுங்கு சிறப்பு கமிஷனர் தேபிந்திர பதக்கும், தில்லி ஜந்தர்மந்தர் உள்ளிட்ட பகுதிகளை கண்காணிக்க சட்டம், ஒழுங்கு சிறப்பு கமிஷனர் சாகர் பிரீத் ஹூடாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
ஜந்தர்-மந்தரில் கிசான் மகாபஞ்சாயத் நடத்தப்படுவதற்கு முன்பு, ஐக்கிய கிசான் மோர்ச்சாவில் (SKM) பிளவு ஏற்பட்டதாக செய்திகள் வந்தன. மகா பஞ்சாயத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் கூறினார். அதே நேரத்தில், இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் டிகாயித்தும் பிரிந்து செல்வதாக அறிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பாரதிய கிசான் யூனியன் சதுனி குழுமத்தின் விவசாயிகள் மகாபஞ்சாயத்துக்காக ஜந்தர்-மந்தரை அடைந்துள்ளனர். இதற்கு முன்னதாக பாரதிய கிசான் யூனியன் சதுனி குழு, குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்காக ஜூலை 31 அன்று சம்யுக்து கிசான் மோர்ச்சாவால் அழைப்பு விடுக்கப்பட்ட பாரத் பந்தில் இருந்து விலகியிருந்தது.
கிசான் பஞ்சாயத்து காரணமாக புது தில்லியில் நெரிசல் ஏற்பட்டுள்ளது
தில்லி ஜந்தர் மந்தரில் ஏற்பாடு செய்யப்பட்ட கிசான் மகாபஞ்சாயத் போராட்டத்தால் டெல்லி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கிசான் மகா பஞ்சாயத்தை முன்னிட்டு, தில்லி காவல்துறை கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது மற்றும் அனைத்து எல்லைகளிலும் வரும் மற்றும் செல்லும் வாகனங்களை சோதனை செய்து வருகிறது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் படிக்க:
TNAU சார்பில் தயார்நிலை உணவுகள் தயாரித்தல் பற்றிய பயிற்சி
50% மானிய விலையில் சம்பா பருவத்திற்கு ஏற்ற நெல் இரகங்கள் விநியோகம்
Share your comments