விவசாயம் என்பது பெரும்பாலும் பருவநிலையும், காலநிலையும் நம்பி நடைபெறுகிறது. எனவே காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் இடர்பாடுகள் மற்றும் இழப்புகளைத் தவிர்க்க வானிலை சார்ந்த வேளாண் முறைகள் அவசியமாகிறது. இதற்காக வேளாண் குறித்த வானிலை முன்னறிவிப்புகளை விவசாயிகளின் கைபேசிகளுக்கு குறுஞ்செய்தியாக தெரிவிக்க திட்டமிட்டுள்ளதாக விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் மைய இயக்குனர் தெரிவித்தார்.
வேளாண்மை அறிவியல் திட்ட ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், விவசாயத் தொழில் பருவமழையை நம்பி இருப்பதால், விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த வானிலை முன்னறிவிப்புகள் அனுப்பி வைக்க உள்ளது என்றார். இதில் அந்தந்த வட்டாரத்தில் நிலவும் காற்றின் திசை, வேகம், ஈரப்பதம், உறைபனி, ஆலங்கடி மழை, சூறைக்காற்று போன்ற தகவல்கள் அனுப்பி வைக்கப்படும் என்றார்.
இந்திய வானிலை ஆய்வுத்துறையால் அதிவேக கணினி மற்றும் தொழில்நுட்ப துணை கொண்டு, வாரத்திற்கு இரு முறை (செவ்வாய் மற்றும் வெள்ளி) வட்டார வாரியாக தெரிவிக்கப்படுகிறது. இவற்றின் பரிந்துரைகள் 60 முதல் 70% துல்லியமாக விவசாயிகளுக்கு கொடுக்கப்பட உள்ளதால் விவசாயிகள் மாறுபடும் வானிலைக்கு ஏற்ப வேளாண் பணிகளை திட்டமிட்டுக் கொள்வதுடன் இழப்புகளை தவிர்க்க இயலும்.
விவசாயிகள் வானிலை சார்ந்த வேளாண் அறிவுரைகள் மற்றும் தகவல்கள் பெற அருகில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் தங்களது தொலைபேசி எண்களை பதிவு செய்து, பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments